கிருட்டினகிரி. ஏப். 3- கிருட்டினகிரி மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 30/03/2026 – அன்று பர்கூர் சட்டமன்ற தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவரும் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளருமான கிருட்டினகிரி (கிழக்கு) திமுக மாவட்ட செயலா ளர் தே.மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற ஆலோ சனைக் கூட்டத்தில்
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் கோ. திராவிடமணி பங்கேற்றுப் பேசினார். உடன் மாவட்டசெயலாளர் செ.பொன்முடி மற்றும் ஊற்றங்கரை, பர்கூர், கிருட்டினகிரி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், விசிக, மதிமுக, தேமுதிக, சிபிஅய், சிபிஅய்(எம்), மமக, எஸ்டிபிஅய் உள்பட கூட்டணி கட்சிகளின் மாவட்டத் தலைவர்கள், செய லாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
பர்கூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் தே.மதியழகன் அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி,செபொன்முடி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
