கழிவாக வீசப்படும் நிலக்கடலைத் தோலிலிருந்து உயர்தர கிராபீனை தயாரிக்கும் முறையை நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வேதிப்பொருட்கள் இன்றி ‘மின்னல் வேக வெப்பமூட்டல்’ மூலம் கார்பனை மறுசீரமைக்கும் இம்முறை, பேட்டரி தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும்.
செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுக்கான மின்சாரப் பயன்பாட்டை 70 சதவீதம் வரை குறைக்கும் நுண்-மின்னணுச் சில்லை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். மனித மூளையிலுள்ள நியூரான்களைப் போலவே இச்சில்லு ஒரே இடத்தில் தகவல்களைச் சேமிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் வல்லது.
