மோடியை அமெரிக்கா பிளாக்மெயில் செய்கிறது; டிரம்பின் கட்டுப்பாட்டில் பிரதமர் உள்ளார் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

2 Min Read

கோட்டயம், மார்ச் 31 பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிக முக்கிய ரகசியங்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டதாகவும், அவர் டொனால்ட் டிரம்பின் கட்டுப்பாட்டில் இருப்ப தாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் முக்கிய ரகசியம்

கேரள சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று (30.3.2026) கேரளா வந்த ராகுல் காந்தி, கோட்டயம் மாவட்டம் பாம் பாடியில் நடைபெற்ற பொதுக் கூட் டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், ரப்பருக்கான ஆதரவு விலை ரூ. 250 ஆக உயர்த்தப்படும். பதவி யேற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத் திலேயே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.” என்றார்.

பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ராகுல் காந்தி, “பிரதமர் மோடி இந்தியாவின் அனைத்து மிக முக்கிய ரகசியங்களையும் அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டார். இந்தியாவின் முக்கியத் தகவல்களை அமெ ரிக்கா தனது விருப்பப்படி பயன் படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான அமெரிக்க பொருட்களை வாங்குவதாக மோடி உறுதியளித்துள்ளார். இவ்வளவு பெரிய கொள்முதல் செய்யப்படும் சூழலில், ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்னவாகும் என்பது தெரியவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

“டிரம்பின் கட்டுப்பாட்டில் மோடி”

மேலும் அவர் பேசுகையில், “தற்போது பிரதமர் மோடி, டொனால்ட் டிரம்பின் கட்டுப் பாட்டில் உள்ளார். எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள விவரங்கள் இன்னும் வெளிச்சத்திற்கு வராததே இதற்கு முக்கிய காரணம். அந்த மூன்றரை மில்லியன் கோப்புகள் முழுமையாக வெளியிடப்பட்டால், மோடியின் உண்மையான முகம் நாட்டு மக்களுக்குத் தெரிந்துவிடும். மோடியைத் தனது பிடியில் வைத் திருக்கத் தேவையான அனைத்து ஆவணங்களும் டிரம்பிடம் உள்ளன” என்று தெரிவித்தார்.

அதானி நிறுவனம் குறித்துக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, “அதானி என்பது சாதாரண நிறுவனம் மட்டுமல்ல, அது பாஜகவின் நிதி அமைப்பின் ஒரு முக்கிய அங்க மாகும். அதானி தொடர்பான அனைத்து ரகசியங்களும் அமெ ரிக்காவுக்கும், டிரம்புக்கும் தெரியும். இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி பிரதமர் மோடியை அமெரிக்கா பிளாக்மெயில் செய்ய முயற்சிப்பதாக” அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *