மத்திய கிழக்கு நாடுகளின் மோதலால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து! கபில் சிபல் எம்.பி. கவலை!

1 Min Read

புதுடில்லி, மார்ச் 31- அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால், மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கே அதிக பாதிப்பு ஏற்படும் என மாநிலங்களவை சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு இருக்கும் சவால் குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய கபில் சிபல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்த சில அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்களை முன்வைத்தார்.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 88.6 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.

இந்தியா நாளொன்றுக்கு இறக்குமதி செய்யும் 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயில், 30 லட்சம் பேரல் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மட்டுமே வருகிறது.

விலை உயர்வு: போர் பதற்றத்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 160 அமெரிக்க டாலராக உயர்ந்தால், இந்தியா 60 சதவிதம் கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்.

எண்ணெய் கையிருப்பு விஷயத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்:

“நெருக்கடி காலங்களில் மட்டுமே பிரதமர் மோடி ‘டீம் இந்தியா’ பற்றிப் பேசுகிறார். ஆனால் மற்ற நேரங்களில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் திட்டமிடலில் அத்தகைய ஒருங்கிணைப்பு இருப்பதில்லை,” என்று கபில் சிபல் விமர்சித்தார்.

சீனா போன்ற நாடுகள் மாற்று வழிகளில் கச்சா எண்ணெயைப் பெறுவதாகவும், ஆனால் இந்தியா இத்தகைய உலகளாவிய மோதல் களால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய சூழலில் இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *