சென்னை, மார்ச் 31- தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வேட்பாளர்களின் கட்சிப் பெயர்கள் தமிழ் மொழியில் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்) உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களது விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
நேற்று (30.3.2026) இரவு வரை சுமார் 561 வேட்பாளர்களின் விவரங்கள் பதிவாகி யுள்ளன.
ஆனால், இந்த இணையதளத்தில் வேட்பாளர்களின் கட்சி விவரங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும் சூழலில், வேட்பாளர் விவரங்களில் தமிழ் மொழி முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
“மாநிலத் தேர்தல்களில் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை.
தமிழைப் புறக் கணிப்பது மொழி உரிமைக்கு எதிரான செயல்.” – அரசியல் நோக்கர்கள் கருத்து.
தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலில் தமிழுக்கு இடமில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, இணையதளத்தில் தமிழையும் சேர்க்க வேண்டும் என கோரிக் கைகள் வலுத்து வரு கின்றன
