தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து களப்பணி ஆற்றுவோம் கிருட்டினகிரி மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

2 Min Read

கிருட்டினகிரி. மார்ச் 30– கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் 28/3/2026 – சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில்  கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் மணியம்மையார் கூட்டரங்கில் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்திகு மாவட்ட கழகத்தலைவர்  கோ.திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார்.

மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி  அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சிக்கு  மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், மாவட்ட ப.க.தலைவர்  ச.கிருட்டினன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர்  எம்.சிவசக்தி  ஆகியோர் முன்னிலை  வகித்துப்பேசினர்.

கூட்டத்தில் மாநில  பகுத்தறி வாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் இல. ஆறுமுகம்,  கி.முருகேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர்  நா. சிலம் பரசன், மாவட்ட இளைஞரணி துணைத்  தலைவர் வெ.புகழேந்தி, மாவட்ட ப.க.துணைத் தலைவர் மு.வேடியப்பன், கிருட்டினகிரி நகர கழகச் செயலாளர் அ.கோ.இராசா, காவேரிப்பட்டணம் ஒன்றியத்  தலைவர் பெ.செல்வம், ஒன்றியச்  செயலாளர் பெ.செல்வேந்திரன், மாவட்ட  மாணவர் கழகத் தலைவர்  இர.அஜய்குமார்  ஆகி யோர் கருத்துரை வழங்கினர். கூட்டத்தில் மாவட்ட  மாணவர் கழகச்  செயலாளர் செ.வீரபாண்டி,  மாணவர் கழக பு.கு.மகிழன், துணைச் செயலாளர் மா.ரூபிகாசிறீ, பெரியார் பிஞ்சுகள் கா.ஆ.நிறை தமிழ், கா.ஆ.நிறை கதிர் உள்பட கழகத் தோழர்கள் கலந்துக்கொண்டனர்.

நிறைவாக மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.சீனிவாசன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

2026-தமிழ்நாடு சட்ட மன்ற பொதுத் தேர்தலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி களின் வேட்பாளர்களை தமிழ் நாடு முழுவதும் அனைத்து தொகுதி களிலும்  வெற்றி வாகை சூடும் வகையில் களப்பணியை திராவிடர் கழகம் முதல் பணியாக தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தலின்படி கிருட்டினகிரி மாவட்ட திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளர்களை அதிக பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடவும், திராவிட மாடல் ஆட்சி தளபதியார் மு.க.ஸ்டாலின் தலைமையில் மேலும் தொடர்ந்திட கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் மாவட்டம் முழுவதும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி தேர்தல் பிரச்சார  களப்பணிகளை துரிதமாக மேற்கொள்வது என ஒருமனதாக  தீர்மானிக்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 05/02/2026 – அன்று கிருட்டினகிரி மாவட்டம் கிருட்டினகிரியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திருச்சி பெரியார் உலகம் நிதியளிப்பு விழா கூட்டத்தில் பெரியார் உலகம்  பெரும் பணிக்கு நிதி உதவியை வழங்கிய பெருந்தகையாளர்களுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற பேருதவி புரிந்த பெருங்கொடையாளர் ஆற்றல் மிக்க  திமுக மாவட்ட கழகச் செயலாளர் தே.மதியழகன் எம்.எல்.ஏ., அவர்களுக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்களுக்கும் மற்றும் பங்கேற்று சிறப்பித்த அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *