டி.கூடலூரில் திராவிடர் கழகத்தின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈட்டி கணேசனின் மகன் சாலை விபத்தில் காயம் அடைந்தார். அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் குமாரசாமி, மாவட்டச் செயலாளர் காளிமுத்து, காப்பாளர் வே. ராஜு , தாந்தோணி ஒன்றிய அமைப்பாளர் வெங்கல்பட்டி கணேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜெகநாதன், மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸ், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் வடிவேல் ஆகியோர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
