7 ஆவது முறையாக ஆட்சி அமைப்போம்! தி.மு.க.வின் திராவிட மாடல் 2.0 தேர்தல் அறிக்கை ‘சூப்பர் ஸ்டார்!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

1 Min Read

சென்னை, மார்ச் 30- சென்னை அண்ணா அறிவால யத்தில் நேற்று (29.3.2026) மாலை தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் உருவாக்கித் தந்த பாதையில், கொள்கைத் தடம் மாறாமல், தி.மு.க.வை தலைமைப் பொறுப்பிலிருந்து, வழிநடத்தி, 6 ஆவது முறையாக தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்து, ‘திராவிட மாடல்’ எனப் பெயரிட்டு, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைத்து, தமிழ்நாட்டை முதன்மை இடத்திற்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். நடை பெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்று 7 ஆவது முறையாக தி.மு.க. ஆட்சியமைக்க இருக்கிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்க நினைக்கும் கூட்டம்தான், தி.மு.க.வை எதிர்க்கிறது. அவர்களும் ஏராளமான பொய்ச்செய்திகளைப் பரப்பி பார்த்தார்கள். அது எதுவுமே தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடவில்லை. இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணம் என்னவென்றால், ‘திராவிட மாடல்’ கட்ட மைத்திருக்கும் வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு தொடர்ந்து பயணிக்க வேண்டும். தமிழ்நாடு, தலை நிமிர்ந்த தமிழ்நாடாக, தலைசிறந்த தமிழ்நாடாக எப்போதுமே இருக்கவேண்டும். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து காட்டிய கடந்த 5 ஆண்டுகால ‘திராவிட மாடலின்’ சாதனைகளை விஞ்சும் அளவிற்கு, ‘திராவிடமாடல் 2.0’ இருக்கும்.

பொதுவாக தமிழ்நாட்டு தேர்தல்களை பொறுத்த வரைக்கும், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான் ‘ஹீரோ’, இப்போது. ‘திராவிட மாடல் 2.0’-க்கான இந்தத் தேர்தல் அறிக்கை ‘சூப்பர் ஸ்டார்’ ஆக களம் இறங்கி இருக்கிறது. ‘திராவிட மாடல் 2.0 இல் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.

இவ்வாறு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *