ஈரானில் பள்ளிக்கூடம் மீதான அமெரிக்க தாக்குதல் போர்க்குற்றமே! ஐ.நா.வில் ஈரான் குற்றச்சாட்டு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மெக்ரான், மார்ச் 28– ஈரானின் மினாப் பள்ளி மீதான அமெரிக்க தாக்குதல் மனித குலத்திற்கு எதிரான தாக்குதல் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்

அணு ஆயுதம் தயா ரிப்பது தொடர்பாக பேச்சு வார்த்தையில் உடன் எட்டப் படாததால், கடந்த மாதம் 28 ஆம் தேதி ஈரான் தலைநகர் டெக்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் மினாப் நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில், குழந்தைகள், ஆசிரியர் கள் உள்பட 160க்கும் மேற்பட்டோர்  கொல்லப் பட்டனர். இந்தத் தாக்குத லால்  அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பன்னாட்டு அளவில் கண் டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் இன்று  அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாவது ;

மினாபில் உள்ள பள்ளி மீதான தாக்குதல் ஒரு சாதாரண விபத்தோ அல்லது தவறான கணிப்போ அல்ல. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் மேம்பட்ட தொழில்நுட்பங்களும், மிகத் துல்லியமான இராணுவ மற்றும் தரவு அமைப்புகளும் இருப்பதாகக் கூறும்போது, இந்தப் பள்ளி மீதான தாக்குதல் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டது என்பதை மறுக்க முடியாது.

பள்ளியை மீது தாக்குதல் நடத்துவது  போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும். இக்குற்றத்தை அனைவரும் வெளிப்படையாகவும் நிபந்தனையின்றியும் கண்டிக்க வேண்டும், மேலும் இக்குற்றத்தைச் செய்தவர்கள் தெளிவாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைகள், அதனைப் பொறுப்பிலிருந்து விடுவிக் காது என்று அவர் கூறினார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *