2024-2025ஆம் ஆண்டில் பா.ஜ.க. நன்கொடை வசூல் ரூ.6074 கோடி: மொத்த தேசிய கட்சிகளை விட 10 மடங்கு அதிகம்

2 Min Read

புதுடில்லி, மார்ச் 28- கடந்த 2024-2025 நிதியாண்டில் பாஜ கட்சி பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.6074.015 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது மற்ற தேசிய கட்சிகள் பெற்றதை விட 10 மடங்கு அதிகமாகும்.

இது தொடர்பாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கடந்த 2024-2025ஆம் ஆண்டில்,தேசிய கட்சிகளால் அறிவிக்கப்பட்ட ரூ.20,000க்கும் மேலான நன்கொடைகள் 11,343 பங்களிப்புகள் மூலம் ரூ.6,648.563 கோடி வந்துள்ளன. இதில், பா.ஜ.க. மட்டும் ரூ.6,074.015 கோடியை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ரூ.517.394 கோடியை பெற்றுள்ளது.

பா,ஜ.க. அறிவித்த நன்கொடைகள், அதே காலகட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி , மார்க்சிஸ்ட் மற்றும் தேசிய மக்கள் கட்சி(என்பிஇபி) ஆகியவற்றின் மொத்த தொகையை விட பத்து மடங்குக்கும் அதிகமாகும். பகுஜன் சமாஜ் கட்சி, ரூ.20,000-க்கு மேல் எந்த நன்கொடையும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது. 2023-2024 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2024-2025 நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கான ஒட்டுமொத்த நன்கொடைகள் ரூ.4,104.285 கோடி அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூ.2,243.947 கோடியாக இருந்த பாஜகவின் வசூல் மட்டும், இந்த நிதியாண்டில் 171 சதவீதம் உயர்ந்துள்ளது. காங்கிரசுக்கான நன்கொடைகள் 2023-2024 நிதியாண்டில் ரூ.281.48 கோடியிலிருந்து 2024-2025 நிதியாண்டில் ரூ.517.394 கோடியாக அதிகரித்துள்ளன.

மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை, ஆம் ஆத்மிக்கு ரூ. 27.044 கோடி கிடைத்தது. தேசிய மக்கள் கட்சிக்கு(என்பிஇபி) ரூ. 1.943 கோடி கிடைத்தது. நிதி திரட்டலில் கார்ப்ரேட் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளன. 3,244 நன்கொடைகள் மூலம் கிடைத்த கார்ப்ரேட் நன்கொடைகள், மொத்த பங்களிப்புகளில் 92.18 சதவீதமான ரூ. 6128.787 கோடி வழங்கியுள்ளன. தனிநபர் நன்கொடையாளர்கள் ரூ.505.66 கோடியை வழங்கினர். கார்ப்ரேட் நன்கொடைகள் மூலம் பாஜ கட்சி ரூ. 5,717.167 கோடியைப் பெற்றது. இது மற்ற அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து பெற்ற ரூ. 411.62 கோடியை விட 13 மடங்கு அதிகம்.

மேலும், தனிநபர் நன்கொடையாளர்களிடமிருந்து அக்கட்சி ரூ. 345.94 கோடியைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி, கார்ப்ரேட் நன்கொடைகள் மூலம் ரூ. 383.86 கோடியையும், தனிநபர் நன்கொடையாளர்களிடமிருந்து ரூ. 132.39 கோடியையும் பெற்றது. புரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை,பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இணைந்து மொத்தம் ரூ. 2413.465 கோடியை வழங்கியது. இதில், ரூ. 2180.7119 கோடி பாஜகவுக்கும் (கட்சி பெற்ற மொத்த நிதியில் 35.90 சதவீதம்), ரூ.216.335 கோடி காங்கிரசுக்கும் (கட்சி பெற்ற மொத்த நிதியில் 41.81 சதவீதம்) மற்றும் ரூ. 16.4178 கோடி ஆம் ஆத்மி கட்சிக்கும் சென்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *