‘டாலர் சிட்டி’யை நாசமாக்கிய பா.ஜ.க. திருப்பூர் தெற்கு தொகுதியில் பா.ஜ.க.விற்கு எதிராக வீசும் அதிருப்தி அலை

2 Min Read

திருப்பூர், மார்ச் 27  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபி டித்துள்ள நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ள போதிலும், வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே தொகுதி மக்களிடையே, குறிப்பாகத் தொழில்துறையினர் மத்தியில் பெரும் அதிருப்தி அலை வீசத் தொடங்கியுள்ளது.

பின்னலாடைத் தொழிலை பதம் பார்க்கும் கொள்கைகள்

‘டாலர் சிட்டி’ என்று உலகப் புகழ்பெற்ற திருப்பூரின் தற்போதைய பின்னடைவுக்கு ஒன்றிய பாஜக அரசின்  தனியார் மற்றும் பொரு ளாதார தொலைநோக்கு இல்லாத திட்ட்ம் தான்  காரணம் என்பது பொது மக்களின் முக்கிய குற்றச்சாட் டாக உள்ளது.  ஜி.எஸ்.டி வரி விதிப்பில் நீடிக்கும் தெளிவற்ற சூழல் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் சிறு, குறு தொழில்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன  பஞ்சு மற்றும் நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவது உற்பத்தியாளர்களை முடக்கியுள்ளது.  குறிப்பாக, அமெரிக் காவின் 50 சதவீத வரி உயர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசு மவுனம் காப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 4 மாத ஏற்றுமதி வர்த்தகம் அடியோடு சரிந்துள்ளதாகத் தொழில்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர். தொழில்துறை வளர்ச்சிக்காக 2014-க்கு முன்பு வரை வழங்கப்பட்ட சலுகைகள் தற்போது பறிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன:

முன்பு 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இருந்த ஏற்றுமதி வரிச்சலுகை (Duty Drawback), தற்போது 2 சதவீதம் முதல் 3 சதவீத மாக குறைக்கப்பட்டுள்ளது. இது பன்னாட்டு சந்தையில் திருப்பூரின் போட்டித் திறனை வெகுவாகப் பாதித்துள்ளது.

அதிருப்தி

திட்ட மாற்றங்கள்: ஏற்றுமதியை ஊக்கப்படுத்திய பழைய எம்இஅய்எஸ் (MEIS) திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகக் கொண்டு வரப்பட்ட RoDTEP திட்டம் பெயரளவில் மட்டுமே உள்ளதாகவும், இதனால் உற்பத்தியாளர்கள் பன்னாட்டு சந்தையில் கடும் போட்டியைச் சந்திக்க முடியாமல் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்ெகனவே தொழில் நலிவினால் வாழ்வாதாரத்தை இழந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், பாஜகவிற்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டதை ஒரு சவாலாகவே பார்க்கின்றனர். “தொழிலைப் பாதுகாக்கத் தவறியவர்களுக்குத் வாக்குரிமை மூலம் பாடம் புகட்டுவோம்” என சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *