அறிவியல் வளர்ச்சி வங்காளம் உள்பட 11 மொழி பேசும் மனித ரோபோ

1 Min Read

வாசிங்டன், மார்ச் 27– அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் பெண் மணிகள் மாநாட்டில், வங்காள மொழி உள்பட 11 மொழிகள் பேசும் மனித ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. உலகளா விய கூட்டணியை ஏற் படுத்த 45 நாடுகளின் முதல் பெண்மணிகள் பங்கேற்கும் மாநாடு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளி கையில் நேற்று (26.3.2026) நடைபெற்றது.

இதில் ஃபிகர் என்ற அமெரிக்க ரோபோட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய மனித ரோபோ, வெள்ளை மாளிகையின் முதல் ரோபோ விருந்தாளியாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோ, மாநாட்டுக்கு தலைமை தாங்கிய மெலனியா டிரம்ப்புடன் இணைந்து வந்தது.

‘ஃபிகர் 3’ என்று பெயரிடப்பட்ட இந்த மனித ரோபோ, கூட் டத்தில் பங்கேற்ற வெளி நாடுகளைச் சேர்ந்த முதல் பெண்மணிகளை ஆங்கிலம், ஸ்பேனிஷ், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், அராபிக், ஜாப்பனீஸ், ஹீப்ரூ, ஸ்லோ வேனி, உக்ரேனியன், ஜார்ஜியன் உட்பட 11 மொழிகளில் வரவேற்றது.

அது வங்காள மொழியில் ‘ஸ்வாகதம்’ என கூறியது. இந்த மனித ரோபோ வீட்டு வேலை களை செய்வதற்காக உரு வாக்கப்பட்ட இயந்திரம். இதில் நிழற்படக் கருவிகள் மற்றும் உணர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா பேசிய தாவது:

என்னுடன் இணைந்த தற்காக ‘ஃபிகர் 3’-க்கு நன்றி.

நீ தான் வெள்ளை மாளிகைக்கு வந்த அமெரிக்காவில் தயாரான முதல் மனித ரோபோ விருந்தாளி. கற்றலுக்கான செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, மனித ரோபோ ஆசிரியர்கள், அமெரிக்க பொருளாதாரத்தை ஊக்கு விப்பதில் தொழில்நுட்பம் மற்றும் கல்வியின் பங்கு ஆகியவைதான் அடுத்த தலைமுறையை உருவாக்கும் 3 முக்கிய தூண்கள். செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் மனித உருவம் கொண்டது.

அது மனித வடிவிலேயே அமையும். மிக விரைவில், செயற்கை நுண்ணறிவு நமது கைப்பேசிகளிலிருந்து வெளியேறி, மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய மனித ரோபோக்களாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *