“பழனிசாமியைப் படுதோல்விப் பழனிசாமியாக மாற்ற வேண்டும்” துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

2 Min Read

மதுரை, மார்ச் 25- திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார். ஏற்கெனவே பல தோல்விகளைச் சந்தித்துள்ள எடப்பாடி பழனிசாமியை, வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பெரும் வெற்றி பெறுவதன் மூலம் “படுதோல்வி பழனிசாமி” யாக மாற்ற வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழ் நாட்டிற்கு அடிக்கடி வந்தாலும் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. தமிழ் நாட்டில் டில்லி அரசி யல் ஒருபோதும் எடு படாது என்றும், இது டில்லி அணிக்கும் தமிழ்நாட்டிற்குமான போட்டி என்றும் அவர் குறிப்பிட்டார்.

“சீசன் நேரத்தில் போலி நிறுவனங்கள் பொருட்களை அசெம்பிள் செய்து ஏமாற்றுவது போல, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை ‘மேட் இன் டில்லி’ என்ற பெயரில் பா.ஜ.க. அசெம்பிள் செய்துள்ளது. தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க.வின் பியூஸை பா.ஜ.க. பிடுங்கிவிடும்.  பீகாரில் 10 முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமாரையே பா.ஜ.க. ஓரம் கட்டி விட்டது. அப்படி இருக்கையில் பழனிசாமி எம்மாத்திரம்? என கேள்வி எழுப்பினார்.

மதுரையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அங்கு பேசிய உதயநிதி ஸ்டாலின் பின்வரும் இலக்குகளை நிர்ணயித்தார்.

இந்தத் தேர்தல் தமக்கும் ஒரு பொதுத்தேர்வு போன் றது என்றும், இதில் ‘ஜஸ்ட் பாஸ்’ செய்யாமல் சாதனை வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார். இளைஞரணி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று கடந்த அய்ந்தாண்டுகளில் தி.மு.க. அரசு செய்த சாதனைகளை விளக்க வேண்டும். பழனிசாமி அ.தி.மு.க.வை டில்லியில் அடகு வைத்துவிட்டாலும், அங்குள்ள தொண்டர் களையும் சேர்த்துப் பாதுகாக்கும் ஒரே தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் “பருப்பு வேகாது” என்றும், எத்தனை ‘பி’ மற்றும் ‘சி’ டீம்களைக் கொண்டு வந்தாலும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தான் மீண்டும் சாம்பியனாக உருவெடுக்கும் என்றும் துணை முதலமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *