புதுடில்லி, மார்ச் 25 இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதி சுமையைக் குறைக்கும் நோக்கில், எத்தனாலை ஒரு முதன்மை சமையல் எரிபொருளாக மாற்ற ஒன்றிய அரசு தீவிர நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான பிரத்யேக அடுப்புகளை உருவாக்கும் பணிகள் அய்.அய்.டி (IIT) நிறுவனங்கள் மூலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
அகில இந்திய எத் தனால் உற்பத்தியாளர் சங்க மாநாட்டில் பேசிய பெட்ரோலிய தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் ரவி, எத்தனாலை அடிப் படையாகக் கொண்ட சமையல் அடுப்புகள் விரைவில் அறிமுகமாகும் எனத் தெரிவித்தார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்ெகனவே புழக்கத்தில் உள்ள சுவீடன் நாட்டின் ‘கேனிஸ்டர்’ தொழில் நுட்பம் இதற்காகப் பயன் படுத்தப்படலாம். இந்த அடுப்புகளில் புகை வராது என்பதால் சுற்றுச் சூழலுக்குப் பாதுகாப்பா னது. திரவ வடிவிலான எத்தனாலை அடுப்பின் பின்புறம் உள்ள உறிஞ்சும் பொருளில் ஊற்றிப் பயன்படுத்த வேண்டும்.
பெட்ரோலில் 20% எத்தனால் கலக் கும் இலக்கை எட்டியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக டீசலிலும் எத் தனாலைக் கலக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், விமானங்களுக்கான ‘நீடித்த எரிபொருள்’ (Sustainable Aviation Fuel) தயாரிப்பிலும் எத்தனால் உற்பத்தியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எத்தனால் தயாரிப்புக்காக வழங்கப்படும் ‘குருணை அரிசி’ (Broken Rice) அளவை 25%-லிருந்து 10%-ஆக ஒன்றிய அரசு குறைத்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்திய உணவு கழகத்திலிருந்து (FCI) எத்தனால் தயாரிப் புக்கு முழு அரிசி வழங் குவது முற்றிலும் நிறுத்தப் படும் என ஒன்றிய உணவு அமைச்சக செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்புக்கும் எரிபொருள் தேவைக்கும் இடையிலான சம நிலையைப் பேண இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எத்தனால் தயாரிப்பில் ஒன்றிய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி யின் மகன்கள் ஈடுபட்டு உள்ளனர். இவர்களது நிறுவனத்தில் இருந்துதான் பெட்ரோலி கலக்கப்படும் 20 சதவீத எத்தனால் வாங்கப் படுகிறது.
இப்போது பெட்ரோ லியத்தயாரிப்பில் அம் பானி இறங்கி உள்ளதால். எத்தனால் தயாரிப்பில் பலகோடி ரூபாய் முத லீடு செய்து களத்தில் இறங்கி உள்ளது அதானி நிறுவனம்.
இந்த இரண்டு நிறு வனத்திற்கும் தரவுவேலை பார்ப்பதுபோல் அவர் களுக்கு லாபம் ஈட்டும் வகையில் எத்தனால் எரி பொருளாக பயன்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
