இங்கல்ல, உத்தரப்பிரதேசத்தில்! அறுவை சிகிச்சையின் போது இளம்பெண் உயிரிழப்பு 5 மருத்துவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு

1 Min Read

லக்னோ, மார்ச் 25- உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் அனிஷா ராய்(வயது 24), சிறுநீரகக் கல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லேசர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.

இதன்படி அனிஷா ராய்க்கு லேசர் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக மருத்துவமனை நிர்வாகத்தினர் 1 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். ஆனால், அனிஷா ராய்க்கு லேசர் சிகிச்சைக்கு பதிலாக அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அனிஷா ராய் சுயநினைவை இழந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த மருத்துவர்கள், அனிஷாவின் குடும்பத்தின ரிடம், உயர்சிகிச்சைக்காக அவரை லக்னோவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் அதற்குள் அனிஷா ராய் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே அனிஷா ராய் உயிரிழந்ததாக கூறி, அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அனிஷாவின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அனிஷா ராயின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் 5 மருத்துவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *