கருவிழிக்காடு, மார்ச் 24 தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி கருவிழிக்காடு கிராமத்தில் அன்னை மணியம்மையார் 107 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கருவிழிக்காடு கிளைக் கழகம் சார்பில் 21.03.2026 அன்று மாலை
w6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
அனைவரையும் வரவேற்று திராவிட மாணவர் கழகத் தோழர் பொறியாளர் இனியவன் உரையாற்றினார்.
‘‘மாணவர் பருவத்தில் இந்த இயக்கத்தில் இணைந்த என்னை, திராவிடர் கழகத்தில் சேர்ந்த என்னை கெட்டுப் போயிராதப்பா, தந்தை இல்லாத பிள்ளையை தாய் ஒழுங்காக வளர்க்கவில்லை என்று ஊர் பழிக்கும்’’ என எனது தாயார் குறிப்பிட்டார்.
அதை பொய்யாக்குகின்ற வகையில், பெரியார் கொள்கையை ஏற்றதனால் நான் ஏற்ற பணியிலும், பிறகு ஏற்றுக்கொண்ட வியாபாரத்திலும் இயக்கப் பணியிலும் எந்த வகையிலும் சலிப்பு இல்லாமல் செய்வதனால் நாணயமாக ஒழுக்கமாக நடந்து கொண்டதால் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளின்படி என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால், இன்றைய நாள் என்னுடைய பிள்ளைகளை மருத்துவராகவும் பொறியாளராகவும் ஆக்கி உள்ளேன். அவர்களையும் பெரியார் கொள்கைப் படியே வளர்த்துள்ளேன். ஊர் பள்ளி மேம்பாட்டிற்கும் பொதுசேவையில் முடிந்த வரை என்னை ஈடுபடுத்தி உள்ளேன். இதுதான் பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றி! நான் ஊதாரித்தனமாக உருப்படாமல் போனேனா? என் தனி வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் குடும்ப வாழ்க்கையிலும் வெற்றி பெற்றேன் என்பதை வெளிப்படுத்தவே ஊர் பொதுமக்களை கூட்டி இந்த பொதுக்கூட்டத்தை நடத்துகிறேன் என தஞ்சை மாவட்ட துணைச் செய லாளர் கருவிழிக்காடு ரெ. சுப்பிரமணியன் தனது தலைமை உரையில் உருக்கமாகக் குறிப்பிட்டார்.
படத்திறப்பு
சுப்பிரமணியன் போன்ற மாணவர்களை சிறப்பாக உருவாக்கிய கருவிழிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேனாள் தலைமை ஆசிரியர் மறைந்த கீழவன்னிபட்டு ரெத்தினம் அவர்களின் படத்தினை கீழவன்னிப்பட்டு ஓய்வு பெற்ற ஆசிரியர் தோழப்பன் திறந்து வைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து தஞ்சை புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வெ.துரை, ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் வன்னிப்பட்டு மு.செந்தில்குமார், காவராப்பட்டு கிளைக் கழக தலைவர் கே.வி. தர்மராஜன், திராவிட மாணவர் கழக பொறுப்பாளர் மருத்துவ மாணவர் இதழினி ஆகியோர் நிகழ்விற்கு முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
மன்னார்குடி ஒன்றிய தலைவர் மு.தமிழ்செல்வன் ,நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் தங்க. பிச்சைக்கண்ணு, பொதுக்குழு உறுப்பினர் மன்னார்குடி ஆர்.எஸ். அன்ப ழகன், கழகச் சொற்பொழிவாளர் இராம. அன்பழகன், மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் நீடாமங்கலம் சி.ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றி சிறப்பித்தனர்.
தஞ்சை மாநகர செயலாளர் இரா. வீரகுமார்,மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் ஆ. லட்சு மணன், திருவோணம் ஒன்றிய செயலாளர் கழக சொற்பொழிவாளர் சில்லத்தூர் சிற்றரசு, நன்னிலம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் ம.அன்புச்செல்வன், ரெத்தினம் அவர்களின் மகள் கயல்விழி ஆகியோர் உரையாற்றினர்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல் மிகச் சிறப்பாக விழாவை நடத்திய சுப்பிரமணியன் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்து மாணவர் பருவத்திலிருந்து இயக்கப் பணியாற்றிய சுப்பிரமணியன் அவர்களைப் பாராட்டி உரையாற்றினார்.
மருத்துவ மாணவர் இதழினி, பொறியாளர் இனியவன் தஞ்சை மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த சேதுராயன் குடிக்காடு பி.ராஜராஜன் நெடுவை வெ.புதியவன் ஆகியோருக்கும், சாதாரண குடும்பத்தில் பிறந்த இதழினி இனியவன் ஆகியோரை மருத்துவராகவும், பொறியாளராகவும் உருவாக்கிய பெற்றோர் சுப்பிரமணியன் – மகேஸ்வரி உள்ளிட்டோருக்கு பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்து, ‘‘30 ஆண்டுகாலம் பெரியார் கொள்கைபடியும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளின் படியும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு நாணயமாகவும், ஒழுக்கமாகவும் நடந்து கொண்டதால், இந்த சின்ன கிராமத்தில் இந்த குடும்பம் கல்வியில் பொருளாதாரத்தில் பொது மரியாதையில் வளர்ந்துள்ளது பாராட்டுக்குரியது. பெரியார் கொள்கையை வாழ்க்கையில் ஏற்றவர்கள் என்றும் தோற்க மாட்டார்கள் என்பதற்கு அடையாளம்தான் கருவிழிக்காடு சுப்பிரமணியன் குடும்பம்’’ என கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தனது உரையில் குறிப்பிட்டார்.
‘‘தஞ்சை மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன், இந்த விழாவை ஒரு குடும்ப விழாகவும், கொள்கை விழாவாகவும் திருவிழா போல், மாநாடு போல் நடத்துகிறார் பாராட்டுக்குரியது என தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தொடக்க உரையில் குறிப்பிட்டார்.
திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார்.
அன்னை மணியம்மையார் அவர்களின் தொண்டு குறித்தும். கல்விதான் நம்மை மேம்படுத்தும் எனவும். தந்தை பெரியார் காண விரும்பிய சமுதாயம் இந்த சின்ன கிராமத்தில் நிறைவேறி இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது எனவும், ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை விளக்கியும், 2026 இல் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை நிறுவுவோம் என தனது உரையில் குறிப்பிட்டார்.
மாவட்ட அளவில் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டக்குடி இமயா தந்தை பெரியார் பற்றி பேசிய பேச்சு சிறப்புக்குரியது.
பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, தனது ‘அறிவுச்சுடர் வலைக்காட்சியின் மூலமாக நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பிட பதிவு செய்தார்.
தஞ்சை மாநகரத் தலைவர் வன்னிபட்டு செ.தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சி ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.

மாணவர்களின் சிலம்பாட்டம்
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒக்கநாடு மேலையூர் சுகன்யா மருந்தக உரிமையாளர் பிரபு அவர்களின் ஒருங்கிணைப்பில் ஒக்கநாடு மேலையூர் மழவராயர் தெரு மாணவர்களின் சிலம்பாட்டம் சிறப்பாக நடை பெற்றது.
கபாடி விளையாட்டுத் துறையில் தேசிய விருது பெற்ற கோவிலூர் சதீஷ் அவர்களின் மகள் நிதிசா, கபாடி தேசிய விளையாட்டு வீரர் கட்டக்குடி தட்சயா, காவல்துறையில் பெண் அதிகாரி கருவிழிக்காடு பாரதி என பல துறையில் சாதனை புரிந்த பெண்களுக்கு அகில இந்திய கபாடி வீரர் நெடுவை கு. வைத்திலிங்கம் பாராட்டி சிறப்பு செய்தார்.
பங்கேற்றோர்
நிகழ்வில் தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், குலமங்கலம் கிளை கழகத் தலைவர் கு.தர்மராசு, குலமங்கலம் கிளை கழக செயலாளர் மு.கணேசன், கவராபட்டு சேகர், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர் மா. கவுதமன், நெடுவாக்கோட்டை விமல், ரெத்தினம் அவர்களின் வாழ்விணையர் ஆண்டாள், மகள்கள் ஜெயசிறீ, சித்ராதேவி, தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெ.பெரியார்கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் நெடுவாகக்கோட்டை வெங்கடாசலம், சேதுராயன் குடிக்காடு ஆ.பிரபாகரன், பேரையூர் செந்தில், ஒக்கநாடு கீழையூர் சுரேஷ், கருவாக்குறிச்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜா, பேரையூர் திமுக கிளைச் செயலாளர் திருஞானம், திமுக வழக்குரைஞர் அணி பொறுப்பாளர் கண்ணை வழக்கு ரைஞர் தவ. ஆறுமுகம், கருவாக்குறிச்சி விடுதலை தருமராசு ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் கோவிலூர் சதீஷ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஊர் பொதுமக்கள், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.
தஞ்சை மீன் ஆராய்ச்சி நிறுவனம் கயலகம் உணவகம் சார்பிலும் கோயிலூர் சதீஷ் குடும்பத்தின் சார்பிலும், கருவிழிக்காடு சுப்பிரமணியன் மகேஸ்வரி குடும்பத்தின் சார்பிலும் அனைவருக்கும் சிறப்பான இரவு உணவு பரிமாறப்பட்டது.
தஞ்சை மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கருவிழிக்காடு ரெ.சுப்ரமணியன் பிரச்சாரக் கூட்டத்தை குடும்ப விழா போல் நெகிழ்ச்சியுடன் நடத்தியது சிறப்பாக இருந்தது.
கருவழிக்காடு கிராமமே கழகக் கொடி பட்டொளி வீசியும், விண்ணொளியிலும் கிராமமே திரண்டு விழாக் கோலம் பூண்டிருந்தது.
ரூ.10,000 வழங்கினர்!
கடந்த மாதம் தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி, மாணவர் கழக மாநாட்டின் செலவுத் தொகையின் நட்டத்தை ஈடுகட்டும்
வகையில் தஞ்சை மாவட்ட சார்பில், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாவட்ட ப.க.துணைத் தலைவர் ஜெ.பெரியார் கண்ணன், மாவட்ட ப.க.இணைச் செயலாளர் ஆ.லெட்சுமணன் ஆகியோர் தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்கிடம் ரூ.10,000 வழங்கினர்.
