உயர் நீதிமன்றங்களில் 12 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தல்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 23– இந்தியாவில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் ஒன்றிய அரசின் சார்பில் ஆஜராக வேண்டிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பணியிடங்கள் பல காலியாக இருப்பதாகவும், இதனை விரைந்து நிரப்ப வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பணியிடம்

ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் சட்ட விவகாரத் துறைக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழு, இது தொடர்பான அறிக்கையைச் அண்மையில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

ஒன்றிய அரசு தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்கப்பட்ட மொத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பணியிடங்களின் எண்ணிக்கை 39 ஆகும். இதன் தற்போதைய நிலை: உச்ச நீதிமன்றம்: ஒதுக்கப்பட்ட 14 பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றங்கள்: அனுமதிக்கப்பட்ட 25 பணியிடங்களில், தற்போது 13 இடங்களில் மட்டுமே அதிகாரிகள் உள்ளனர். மீதமுள்ள 12 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதனால் நீதிமன்றங்களில் ஒன்றிய அரசின் வாதங்களை வலுவாக முன்வைப்பதில் சுணக்கம் ஏற்படும் என நிலைக்குழு கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக, பொதுநலன் சார்ந்த வழக்குகளில் (PIL) இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்தப் பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் சட்ட ரீதியான சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அனுமதிக்கப்பட்ட சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அவ்வப்போது மறுஆய்வு (Review) செய்ய வேண்டும் என்றும் நிலைக்குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது. அரசுத் தரப்பு வாதங்கள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய, தேவைக்கேற்ப கூடுதல் பணியிடங்களை உருவாக்குவது அவசியம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு தேர்தல் நடத்தை விதிகள் தீவிர அமல்

ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.75 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்!

சென்னை, மார்ச் 23– தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.75 கோடி

கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 75.03 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விவரம்: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி பறிமுதல் செய்யப்பட்டவற்றின் விவரங்கள் பின்வருமாறு:

வகைப்பாடு மதிப்பு (ரூபாயில்) ரொக்கப் பணம் 23.74 கோடி தங்கம் மற்றும் வெள்ளி 23.19 கோடி இலவசப் பொருட்கள் 21.96 கோடி போதைப் பொருட்கள் 5.63 கோடி மதுபானங்கள் 51 லட்சம் மொத்த மதிப்பு 75.03 கோடி முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *