கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.3.2026

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* திராவிட மாடல் அரசின் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தில் இதுவரை 897.82 கோடி மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி நீக்க நோட்டீஸ்: ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்படுகிறார், ஒட்டு மொத்த வாக்காளர்களை நீக்க முயற்சிக்கிறார் உள்ளிட்ட 12 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்க்கட்சி நோட்டீஸ்.

தி இந்து:

* ஆர்.எல்.டி.யில் தியாகி: முன்னாள் ஜனதா தளம் (அய்க்கியம்) [JD(U)] தலைவரான கே.சி. தியாகி, புது டில்லியில் நடைபெற்ற நிகழ்வில், அக்கட்சியின் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில் முறைப்படி ராஷ்டிரிய லோக் தளம் (RLD) கட்சியில் இணைந்தார்.

தி டெலிகிராப்:

* திருநங்கைகள் மசோதா மீதான எதிர்ப்பு வலுக்கிறது; ‘திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா, 2026’ எனப்படும் இம்மசோதா, திருநங்கைகளின் அடையாளம் மற்றும் சலுகைகளை, மருத்துவ ரீதியாகச் சான்றளிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்துகிறது. இது தற்போது நடைமுறையில் உள்ள ‘சுய-அடையாளம் காணும் முறை’யிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். பல ஆண்டுகால உழைப்பு வீணானது எனச் சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சியினரும் வேதனை.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘மோடி ஜி, இப்போது உங்கள் பையை தூக்கிக் கொண்டு கிளம்புங்கள்’: பணவீக்கம் குறித்து பிரதமருக்கு சஞ்சய் ராவத் விடுத்த அறிவுரை: ‘ரூபாயின் மதிப்பு குறையும் போது, நாட்டின் கவுரவமும் குறையும்’ என்று மோடி ஜி முன்பு கூறியிருந்தார். இப்போது சரிந்து கொண்டிருப்பது எது?” என சஞ்சய் ராவத் கேள்வி.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *