அண்மைக்காலமாக, இந்தியாவின் அரசியல் களத்தில் நிலவும் பிம்பங்களுக்கும், எதார்த்த நிலைக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் குறித்த விவாதங்கள் உலகளவில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ஓமனில் வசிக்கும் இந்தியப் பார்ப்பனப் பெண் ஒருவர் முன்வைத்துள்ள கருத்துகள், இந்தியாவில் நிலவும் பசு “மாட்டிறைச்சி” குறித்த பொதுவான பார்வையைச் சவாலுக்கு உட்படுத்தியுள்ளன.
இறக்குமதி மய்யம் எந்த நாடு?
இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலில், பசுப் பாதுகாப்பு மற்றும் மாட்டிறைச்சி தடை ஆகியவை மிக முக்கியமான விவாதப் பொருளாக உள்ளன. ஆனால், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அங்குக் காணும் காட்சிகள் வேறாக இருக்கின்றன. ஓமனில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான மாட்டிறைச்சி குறிப்பாக பசுமாட்டிறைச்சி (சிலிகா என்ற தாதுக்கள் அதிகம் உள்ள இறைச்சி) இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அந்தப் பெண் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சி குறித்துப் பொதுவாகச் சொல்லப்படும் ஒரு வாதம் என்னவென்றால், அது “எருமை இறைச்சி” என்பதுதான். ஆனால், இதில் மறைந்திருக்கும் சில உண்மைகளை கவனிக்க வேண்டும்.
இந்தியாவில் இது எருமை இறைச்சி என்று சொல்லப்பட்டாலும், ஓமன் போன்ற வெளிநாடுகளில் இது “மாட்டிறைச்சி” (Beef) என்றே வெளிப்படையாகக் குறிக்கப்பட்டு விற்கப்படுகிறது.
ஏற்றுமதியாவது பசு மாட்டிறைச்சியே!
பல சந்தர்ப்பங்களில், இவை வெறும் எருமை இறைச்சி மட்டுமல்ல, பசு மாட்டிறைச்சியே இந்தியாவி லிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
“மாட்டிறைச்சி” என்றாலே அது எருமை இறைச்சிதான் என்று நம்ப வைக்கப்பட்டுள்ள அப்பாவி இந்திய மக்களின் புரிதலுக்கும், உலகச் சந்தையில் இந்தியா கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது.
இந்தியாவில் ஹிந்துத்துவ அரசியல் கொள்கை கட்டமைக்கப்படும் வேளையில், மறுபுறம் இந்தியா உலகின் மிகப்பெரிய இறைச்சி ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. வெளிநாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் ‘Product of India’ என்ற முத்திரையுடன் விற்கப்படும் மாட்டிறைச்சி பாக்கெட்டுகள், இந்தியாவில் சொல்லப்படும் கதை களுக்கு முரணாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
“இந்தியாவில் சொல்லப்படும் கதைகளும், வெளிநாடுகளில் நாம் காணும் எதார்த்தங்களும் நேர்மாறாக உள்ளன. எருமை இறைச்சி என்ற பெயரில் இந்தியாவிலிருந்து உண்மையில் பசு இறைச்சியே ஏற்றுமதி செய்யப்படுகிறது.”
இந்தத் தகவல்கள் சமூக வலைதளங்களிலும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடையேயும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது வெறும் உணர்வுப்பூர்வமான விஷயம் மட்டுமல்லாமல், பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது.
எருமை இறைச்சி கீழை நாடுகளான வியட்நாம், சீனாவின் தெற்குப்பகுதி இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் நாடுகளில் அதிகம் உண்ணப்படுகிறது காரணம் அந்த மிக வெப்பச் சூழலுக்கு எருமை இறைச்சி ஒத்துப் போகும்.
ஆனால், குளிர்பிரதேசம், பாலைவனப் பகுதி நாடுகள் மற்றும் பெரும்பாலான அமெரிக்க நாடுகளில் பசு இறைச்சியே முதன்மையாக உள்ளது.
‘பசு’ – அரசியல் கருவியான விந்தை!
அறிவியல் காரணங்களால் பசு இறைச்சியில் உள்ள சிலிகா என்னும் தனிமம் உடலின் மென்மையை உருவாக்கவும், மூளை மற்றும் நரம்புச்செல்களுக்கு அப்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ஓர் ஊக்கியாகவும் செயல்படுவதாவதால் இந்தியப் பெருங்கடல் நாடுகளைத் தவிர்த்து அனைத்திலுமே பசு மாட்டிறைச்சியே அங்கீகரிக்கப்பட்ட உணவாக உள்ளது.
இந்திய அரசியலில் ‘பசு’ என்பது வெறும் விலங்கல்ல; அது ஓர் உணர்ச்சிகரமான அரசியல் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. ஒருபுறம் பசுப் பாதுகாப்பு (Cow Vigilantism) என்ற பெயரில் சாதாரண மக்கள் மீதும், சிறுபான்மையினர் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஆனால், மறுபுறம் இதே ‘பசுப் பாதுகாவலர்கள்’ என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் கும்பல்களின் பின்னணியில் இருக்கும் நிறுவனங்கள், உலக நாடுகளுக்கு மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருவதுதான் கசப்பான உண்மை.
ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்:
முரண்பாட்டின் உச்சம்!
முரண்பாட்டின் உச்சம்!
இந்தியா உலக அளவில் மாட்டு இறைச்சி (குறிப்பாக பசு இறைச்சி) ஏற்றுமதியில் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. “பசு புனிதமானது” என்று முழக்கமிடும் அதே வேளையில், அரபு நாடுகளுக்கும் அய்ரோப்பிய நாடுகளுக்கும் டன் கணக்கில் இறைச்சி அனுப்பப்படுகிறது. இந்த ஏற்றுமதி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் முதலீட் டாளர்களைப் பார்த்தால், அவர்கள் தீவிரமான ‘ஹிந்துத்துவ’ ஆதரவாளர்களாகவும், அரசியல் கட்சிகளுக்குப் பெரும் நிதி வழங்குபவர்களாகவும் இருப்பது அம்பலமாகி யுள்ளது.
சாதாரண ஏழை மக்கள் மாடுகளை ஏற்றிச் சென்றால் அவர்களைத் தாக்கும் கும்பல்கள், பெரிய அளவிலான இறைச்சி ஆலைகளை (Slaughterhouses) நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களை நோக்கி ஒரு விரலைக்கூட நீட்டுவதில்லை.
பசுவின் பெயரால் மதத் துவேஷத்தை வளர்ப்பது உள்நாட்டில் அரசியலாகும்.
அரபு நாடுகளின் ‘ஹலால்’ (Halal) சான்றிதழ் பெற்று இறைச்சியை விற்று அந்நியச் செலாவணியைப் பெருக்குவது வெளிநாட்டில் நடத்துகின்ற வணிகமாகும்.
பொருளாதாரப் பின்னணி
மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு வாக்குகளைப் பெறும் கும்பல்கள், திரைமறைவில் இறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலமாகவும், நன்கொடைகள் மூலமாகவும் பெரும் தொகையைப் பெறுகின்றன. அதாவது, ஒருபுறம் பசுவைக் காப்பதாகக் கூறி சாமானியர்களை மோதவிட்டுவிட்டு, மறுபுறம் அதே பசுக்களின் இறைச்சியை விற்று வரும் லாபத்தில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்கின்றனர்.
மக்களுக்குப் புரிய வேண்டிய உண்மை!
பசுப் பாதுகாப்பு என்பது ஒரு ‘புனிதமான’ நோக்கம் என்றால், அது ஏன் பெரிய நிறுவனங்களுக்குப் பொருந்தவில்லை? ஏன் இறைச்சி ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர்கள் இந்த அமைப்புகளின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள்?
இறைச்சி ஏற்றுமதி மூலம் கிடைக்கும் பெரும் பணம், அரசியல் அதிகாரத்திற்குத் தீனியாகப் பயன்படுகிறது. தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரச் சூழலில், கொள்கைகளை விட லாபமே முக்கியம் என்று கருதும் இந்த ‘ஹிந்துத்துவ’ கும்பல்களின் நாடகத்தை மக்கள் உணர வேண்டிய தருணம் இது. மதத்தின் பெயரால் செய்யப்படும் வன்முறைகள் அனைத்தும் உண்மையில் மதத்திற்காக அல்ல, மாறாக அதிகாரத்திற்காகவும் பணத்திற்காகவும் மட்டுமே. பசுவின் மீது உண்மையான அன்பு கொண்டவர்கள், இந்த கார்ப்பரேட் இறைச்சி வணிகத்தின் பின்னால் இருக்கும் அரசியல் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டும்.
