உடன்குடி அனல் மின்நிலையம் ஜூன் மாதத்திற்குள் வணிக ரீதியிலான மின் உற்பத்தி துவக்கம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தூத்துக்குடி, மார்ச் 20- உடன்குடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின்நிலையத்தின் முதல் அலகில், வரும் ஜூன் மாதத்திற்குள் வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்க தமிழ்நாடு மின்சார வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

மொத்தத் திறன்: தலா 660 மெகாவாட் கொண்ட 2 அலகுகள் (மொத்தம் 1,320 மெகாவாட்).

திட்ட மதிப்பு: ரூ.13,076 கோடி. கட்டுமான நிறுவனம்: பெல் (BHEL). தற்போதைய நிலை: கடந்த மார்ச் 13-ஆம் தேதி முதல் அலகின் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கும் முதல் அலகில் சுமார் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த வாரம் முதல் அதன் முழுத் திறனான 660 மெகாவாட் எட்டும் வகையில் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

“சோதனை ஓட்டத்தின் போது ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்ட பிறகு, ஜூன் மாதம் முதல் வணிக ரீதியிலான உற்பத்தி முழுவீச்சில் தொடங்கும். இதன் மூலம் தமிழ்நாட்டின் கோடைக்கால மின்தேவை பெருமளவு பூர்த்தி செய்யப்படும்.”

முதல் அலகின் பணிகள் நிலைபெற்றவுடன், விரைவில் 2-ஆவது அலகிலும் மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *