திராவிட நாகரிகத்தை வெளிச்சமாக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சர். ஜான் மார்ஷல் 150ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு நாளை 19.3.2026 வியாழன் காலை சரியாக 10 மணிக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் மாலை அணிவித்து அவரது தொண்டறத்தைப் போற்றும் நிகழ்ச்சி நடைபெறும். சென்னை மாவட்டங்களின் கழகத் தோழர்களும், பொது மக்களும் பெரும் அளவில் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
