தேவக்கோட்டை மற்றும் சில பகுதியிலிருந்து நேபாள நாட்டில் உள்ள கோயில்களுக்குப் பக்திச் சுற்றுலா சென்று, பயங்கர சாலை விபத்தினால் ஏழு பேருக்கு மேல் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைகிறோம்.
அவர்களது சடலங்கள் இன்று வந்து எரியூட்டப்பட உள்ளன என்ற நிலையில் மிகப் பெரும் சோகத்திற்கும் மீளாத் துயரத்திற்கும் ஆளாகியுள்ள அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு மனிதாபிமான ஆறுதலையும், மறைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.3.2026
