சாகித்ய அகாடமி விருது பெற்ற முற்போக்கு எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்குக் கழகத் தலைவர் வாழ்த்து

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழில் 2025-ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான சாகித்ய அகாடமி விருது முற்போக்குச் சிந்தனையாளரும், செயல்பாட்டாளரும், எழுத்தாள ருமான ச.தமிழ்ச் செல்வன் அவர் களுக்கு “தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்”  நூலுக்காக அறிவிக்கப் பட்டுள்ளது.

முன்பே எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 24 பேருக்கு அறிவிக்கப்பட இருந்த சூழலில், சாகித்ய அகாடமி விருதுகளில் ஒன்றிய அரசின் அவசியமற்ற தலையீட்டால் காலதாமதாகி, கடும் எதிர்ப்பை இந்தியா முழுவதும் சந்தித்தது. என்றாலும் மாற்றம் இன்றி இப்போதேனும் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியே!

கலை, இலக்கியத் துறைகளில் பாசிசப் போக்குகள் இல்லாமல் பாரபட்சமற்ற நிலை தொடர வேண்டும்.

கருத்துரிமைக்காகவும், சமூகநீதி – சமத்துவத்துக்காகவும் தொடர்ந்து களத்தில் நிற்கும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நமது  கொள்கைப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

17.03.2026    

சென்னை     

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *