சென்னை, மார்ச்.15 ரூ.3.54 கோடி மதிப்பிலான கட்டடங்களை தாம்பரம் மண்டலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார்.
தாம்பரம் மாநகராட்சி, 4-ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட 50-ஆவது வார்டு, ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயாலிசிஸ் சென்டர், 56-ஆவது வார்டு பகுதியில் உள்ள மங்களேரி குளம் சீரமைப்பு, 60-ஆவது வார்டு, கல்யாண் நகர் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், பெருங்களத்தூர் குளம் அருகே அங்கன்வாடி மய்யம், முடிச் சூர் மற்றும் திருவஞ்சேரி பகுதிகளில் புதிய நியாய விலை கடைகள் அமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று 50-ஆவது வார்டு, ரங்கநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது நிதி ரூ. 39 லட் சம் மதிப்பீட்டில் 6 படுக்கை வசதிகள் கொண்ட டயாலிசிஸ் மய்யம், 56-ஆவது வார்டில், அம் ரூத் 2.0 நிதி ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் மங்களேரி குளம் சீரமைப்பு பணி, பி.எம்.ஜன்மன் திட்ட நிதி ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன் வாடி மய்யம், 60-ஆவது வார்டில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடம், முடிச்சூர் பகுதியில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை திருவஞ்சேரி பகுதியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை என மொத்தம் ரூ.3 கோடியே 57 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்ட பணிகள் நடை பெற்றன.
இந்த வளர்ச்சித் திட்டப் பணி கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இவை அனைத் தையும் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று (14.3.2026) தாம்பரம் மண்டலத்தில் நடைபெற் றது. இதில் சிறீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டு, கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் தாம் பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
