நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களில் பத்து சதவீதம் மட்டுமே பெண்கள்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச்.12 ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் (ஏடிஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு இணைந்து ‘இந்திய அரசியலில் பெண்களின் பங்கு மற்றும் பிரதிநிதித்துவம்’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

நாடு முழுவதும் உள்ள மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4,666. இதில் 10 சதவீதம் (464 பேர்) மட்டுமே பெண்கள். 18-ஆவது மக்களவையில் உள்ள 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 74 பேர் (14 சதவீதம்) மட்டுமே பெண்கள்.இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில், 22 மாநிலங்களில் மட்டுமே பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லை.

மக்களவை உறுப்பினர்கள்: மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 11 பெண் நாடாளுமன்ற உறுப் பினர்கள்  உள்ளனர். மகாராட்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 7 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 6 பேரும் உள்ளனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள்: நாடு முழுவதும் உள்ள 4,123 சட்டமன்ற உறுப்பினர்களில் 390 பேர் (9 சதவீதம்) மட்டுமே பெண்கள். இதில் உத்தரப் பிரதேசம் (47), மேற்கு வங்கம் (40), பீகார் (29) ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.கட்சிகள் வாரியாக:

பாஜக: 31 பெண் நாடாளுமன்ற உறுப் பினர்கள், 163 பெண் சட்டமன்ற உறுப்பினர் களுடன் முதலிடத் தில் உள்ளது.காங்கிரஸ்: 13 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 59 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்.

திரிணமுல் காங்கிரஸ்: 11 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 34 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள். கடந்த சில பத்தாண்டுகளாகத் தேர்தலில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 1957 மக்களவைத் தேர்தலில் வெறும் 45 பெண்கள் மட்டுமே போட்டியிட்ட நிலையில், 2024 தேர்தலில் அந்த எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *