சென்னையில் டிசிஎஸ்–சில் அய்.டி. வேலை வாய்ப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை. மார்ச் 12 சென்னையில் செயல்பட்டு வரும் டி.சி.எஸ். அய்.டி. நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கான நேர்காணல் (இண்டர்வியூ) மார்ச் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து நேர்காணலில் பங்கேற்கலாம்.

டிசிஎஸ் அய்டி நிறுவனத்தில் தற்போது ரியாக்ட் ஜேஎஸ் (React JS) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பணிக்கு ரியாக்ட்/ஆங்குலர்/Vue உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அப்ளிகேஷன் டெவலப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ரியாக்ட்/ஆங்குலர்/Vue உள்ளிட்டவற்றில் பிரேம்வொர்க் காம்போனன்ட்ஸ் லைப் சைக்கிள் மற்றும் Redux பற்றி நல்ல புரிதல் இருக்க வேண்டும்.

தகுதிகள் என்னென்ன?

ஜாவா ஸ்கிரிப்ட்டிங் ஸ்கில்ஸ் மற்றும் ECMA 6 ஸ்டேன்டர்ட் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் என்பிஎம், வெப்பேக் உள்ளிட்டவை நன்கு அறிந்திருக்க ணேடும். ஜாவா, ரெஸ்ட்புல் ஏபிஅய் (RESTFUL API’s) உள்ளிட்டவை பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும். UX டிசைனர் வழங்கும் இன்புட்களை பயன்படுத்தி UI ஃபிரேம்வொர்க் காம்போனென்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Material UI/Paper UI உள்ளிட்ட 3rd பார்ட்டி லைப்ரேரியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இவை அனைத்தும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஆங்கிலம் தெரிய வேண்டும்

அதேபோல், ‘Good to Have’ என்ற பிரிவில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி எச்டிஎம்எல் 5, சிஎஸ்எஸ், எஸ்சிஎஸ்எஸ் உள்ளிட்டவற்றை பயன் படுத்தி போர்ட்டபிள் அப்ளிகேஷன்ஸ் உருவாக்க தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் UI அப்ளிகேஷனில் டீபக் பெர்மாமன்ஸ் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் எஸ்விஎன் அல்லது ஜி.அய்.டி. (GIT) உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

பணி அனுபவம் எவ்வளவு?

மேலும் கிரிட்டிக்கல் திங்கராகவும், தனியாகவும், குழுவுடனும் சேர்ந்து பணியாற்றத் தெரிந்திருக்க வேண்டும். Jenkins Scripts, Continuous Integration, Continuous Deployment உள்ளிட்டவற்றில் தெரிந்திருக்க வேண்டும். அதோடு Agile-லில் வல்லுநராக இருக்க வேண்டும். இவைஎல்லலாவற்றுக்கும் மேலாக ரியாக்ட் ஜேஎஸ் பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மார்ச் 14ஆம் தேதி நேர்காணல்

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான ஊதியம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசிக் கட்ட நேர்காணலின்போது தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து ஊதியம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. நேர்காணல் மார்ச் 14ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள்  விண்ணப்பம் செய்து நேர்காணலில் பங்கேற்கலாம். விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் உள்ளிட்டவை பற்றிய தகவல் வழங்கப்படும்.

அதன்படி நேர்காணலில் பங்கேற்கலாம்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *