அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் ‘கம்பியூட்டர் ஆபரேட்டர்’ பதவி தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையத்தின் மூலம் நிரப்பப்படும்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 12- அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் புதிதாக ‘கணிப்பொறி இயக்குபவர்’ (கம்ப்யூட்டர் ஆபரேட்டர்) பதவி தோற்றுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பதவிக்கான சிறப்பு கல்வித் தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரத்தில் கூறியிருப்பதாவது:
மாவட்ட நீதிமன்றங்களில் ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ பதவி புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது. இந்த பதவி நேரடி நியமன முறை வாயிலாகவும், பணிமாற்றல் முறையிலும் நிரப்பப்படும். மாவட்ட முதன்மை நீதிபதி அல்லது மாவட்ட நீதிபதி பணிநியமன அதிகாரியாக இருப்பார். தமிழ்நாடு நீதித் துறை அமைச்சுப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ பதவிக்கான நேரடி நியமனத்துக்கு கல்வித் தகுதி பி.எஸ்சி கம்ப்யூட்டர் அல்லது பி.சி.ஏ. பட்டப்படிப்பு ஆகும்.
மேலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் டிப்ளமா பெற்றுள்ள பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். பட்டதாரிகளும் இதற்கு தகுதியுடையவர் ஆவர். அடிப்படை கல்வித் தகுதியான பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டியது அவசியம் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவிக்கு அடிப்படை ஊதியம் ரூ.20,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பதவியானது டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு மூலம் நிரப்பப்படும். டிஎன்பிஎஸ்சியின் 2026 ஆண்டுக்கான தேர்வுக் கால அட்டவணையின்படி, ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதல்நிலைத்தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு தேர்வு அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *