டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றவே மக்களவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது, எதிர்க்கட்சிகள் பேச்சு.
* மேற்குவங்கத்தில் 53 லட்சம் வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எரிவாயு உருளை தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் எஸ்மா சட்டத்தை அமல்படுத்திய ஒன்றிய அரசு!!இயற்கை எரிவாயு ஒதுக்கீட்டில் மாற்றம் சமையல் எரிவாயுவுக்கு முன்னுரிமை:
* ஒன்றிய அரசின் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து சர்ச்சை கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி..!!
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “அரசியலமைப்பையும்” “சபையின் கண்ணியத் தையும்” காப்பாற்றுவதற்காக பிர்லாவை மக்களவை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன என கோகாய் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒடிசா மாநிலத்தில் ஜூன் 2024 முதல் 54 வகுப்புவாத கலவரங்களும் 7 கும்பல் படுகொலைகளும் நடை பெற்றது. முதலமைச்சர் மோகன் சரண் மஜ்ஹி சட்டமன்றத்தில் ஒப்புதல்.
தி இந்து:
* மேற்கு வங்காளத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்து புதிய விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிராகரித்ததை அடுத்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
* தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம் (SPC), மாநிலத்தில் உள்ள தற்காலிக, அமைப்புசாரா (GIG) கிக் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகளை மேம்படுத்துவதற்கான கொள்கை நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.
– குடந்தை கருணா
