கோவையில் நடைபெறும் ‘அன்னை மணியம்மை’யார் பிறந்தநாள் (மார்ச்-10) விழா, ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும், வாக்காளர் கடமையும் திராவிடர் கழக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
02-03- 2026 இரவு 9 மணி அளவில் மேனாள் அமைச்சர், தி.மு.க. மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி அவர்களை கரூர் கலைஞர் அறிவாலயத்தில் சந்தித்து பொதுக்கூட்ட அழைப்பிதழ் வழங்கி கழகப் பொறுப்பாளர்கள் அழைப்பு விடுத்தனர்.
அவர் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டு ஆசிரியர் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் அவசியம் பங்கேற்பதாக உறுதியளித்தார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்,கோவை மாவட்ட தலைவர் மா.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ. பிரபாகரன், கழகத் தோழர் இரா.வெற்றிச்செல்வன், அ.மு.ராசா, குறிச்சி இர.முத்துகணேஷ், பொன்னாப்பூர் பு.திருநாவுக்கரசு ஆகியோர் சந்தித்தனர்.
கரூர் மாவட்ட தலைவர் குமாரசாமி ,பொதுக்குழு உறுப்பினர் அன்பு, அலெக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
