அய்தராபாத் மாநகரை சுற்றுப்புறச் சூழல் பாதிப்பில்லாத “மாசு இல்லா நகரமாக” மாற்ற தெலங்கானா அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 9, 2026-க்குள் அய்தராபாத் நகருக்குள் டீசல் பேருந்துகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு, 100சதவீத மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதலமைச்சர் ஏ. ரேவந்த் அறிவித்துள்ளார். பன்னாட்டு மகளிர் தினத்தை முன்னிட்டு அய்தராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இதற்கான விரிவான செயல்திட்டத்தை விளக்கினார்.
