பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மகன் நிஷாந்த் குமார் தந்தையின் கட்சியான அய்க்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பாட்னா,  மார்ச் 9– பீகார் அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக, முதலமைச்சர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், தனது தந்தையின் கட்சியான அய்க்கிய ஜனதா தளத்தில் (ஜேடியு) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

நீண்ட காலமாக அரசியலில் இருந்து விலகி இருந்த நிஷாந்த் குமார், தற்போது அய்க்கிய ஜனதா தளத்தின் அடிப்படை உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

பாட்னாவில் நடைபெற்ற கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டது. அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிஷ் குமார் இதுவரை தனது குடும்பத்தினரை அரசியலுக்குக் கொண்டு வருவதைத் தவிர்த்து வந்த நிலையில், தற்போது நிஷாந்த் குமாரின் வருகை பீகார் அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிஷாந்த் குமார் ஒரு மென்பொருள் பொறியாளர் ஆவார்.

இதுவரை பொதுமேடைகளில் அதிகம் தோன்றாத அவர், தற்போது கட்சியின் வலுவூட்டலுக்காகவும், வருங்காலத் தலைமையை உருவாக்குவதற்காகவும் அரசியலில் களமிறக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *