ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில், ஓடும் ரயிலில் சாக்கடையைத் தூக்கி வீசும் மகேஷ்குஞ்ச் (உத்தரப் பிரதேசம்) மக்கள்
ஊடகவியலாளர்களுக்கு ஹோலி இனிப்போடு போதைப் பொட்டலமும் விநியோகம்!

உத்தரப்பிரதேச அமைச்சர் ஒருவர், ஹோலிப் பரிசு என்ற பெயரில் ஊடகவிய லாளர்களுக்கு மிட்டாய் என்ற பெயரில் போதை தரும் பொருளையும் வைத்ததாக எழுந்த புகாரில் ஊடகவியலாளர்கள் அனைவரும் அமைச்சர் தந்த ஹோலி பரிசைத் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

ஹோலிக் கொண்டாட்டத் திற்கு ‘வண்ணப்பொடி தூவுகிறோம்’ என்ற பெயரில், பெண்களை மான பங்கப்படுத்தும் கூட்டம்.
உத்தரப்பிரதேசம் புலந்தசகர் பகுதியில் ஹோலிக் கொண்டாட்டத்தின் போது இளம்பெண் ஒருவரை கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்கள். இது தொடர்பாக புகார் அளித்தபோது, காவல்நிலையத்திற்குள் புகுந்து, ஹோலி அன்று நடந்துவிட்டது, கண்டுகொள்ளக்கூடாது என்று கூச்சலிட்டனர்.

ஹிந்துக்களின் பவித்திர நகரம் என்று கூறிக்கொள்ளும் வாரணாசியில், கஞ்சாப்போதையில் ஆணும், பெண்ணும் ஹோலி கொண்டாட்டம்!
