கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.3.2026

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நீக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்; திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு. பதவி நீக்க தீர்மானம் மீது நாளை (9.3.2026) விவாதம் நடக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தி மகளிர் தினத்தன்று மோடி அரசு தந்த பரிசு சமையல் கேஸ் ரூ.928 ஆக உயர்வு: வர்த்தக சிலிண்டர் விலையும் ரூ.115 அதிகரிப்பு: அதிகாலையில் இடியை இறக்கிய ஒன்றிய அரசு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகாரில் நிதிஷ் குமாருக்கு நடந்தது போல பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடியை பாஜக தூக்கி விடும்: ஓபிஎஸ் அணியினர் இணைப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

தி டெலிகிராப்:

*செயல்படாத ஏஅய்சிடிஇ: இந்தியாவில் பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளை ஒழுங்குபடுத்தும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), ஒரு ஆண்டுக்கும் மேலாக தொழில்நுட்ப ரீதியாக செயலிழந்துள்ளது, ஏனெனில் அதன் உச்சக் குழுவை மறு சீரமைப்பதில் ஒன்றிய அரசு இழுத்தடித்து வருகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* இந்தியாவை ‘நல்ல நடிகர்’ என்று அமெ ரிக்கா அழைப்பது பிரதமர் மோடியின் கோழைத்தனத் திற்கு சான்று: ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்த ஒப்புக் கொண்டதற்காக அமெரிக்க கருவூல செயலாளர் இந்தியாவைப் பாராட்டியதை தொடர்ந்து, பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை “கோழைத்தனம்” என  காங்கிரஸ் விமர்சனம்.

– குடந்தை கருணா

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *