அட கோமாளிக் கூட்டங்களே!

2 Min Read

தற்போது அமெரிக்காவின் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்து எதிர்த்தாக்குதலை தீவிரமாக்கி வருகிறது ஈரான்
கத்தாரின் உள்ள ஏவுகனை கண்காணிப்பு ரேடார் இலக்கை தாக்கியதால் ஈரானில் இருந்துவரும் ஏவுகணைகளை முன்கூட்டியே கணிக்கமுடியவில்லை. இதனால் பகரின், சவுதி அரேபியா, குவைத், கத்தார் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பெரும் சேதத்தை சந்திக்கிறது. அமெரிக்க அரசாங்கம் முதல் முறையாக 6 முதல் 12 அமெரிக்க வீரர்கள் மரணம் என்று அறிவித்துள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் இருக்கும் என்று அரபிமொழி செய்தி நிறுவனங்கள் கூறி வருகிறது.
இந்த நிலையில், போரில் இருந்து காப்பாற்றவும் டிரம்பின் உயிரைக் காப்பாற்றவேண்டி யூதர்கள் தங்களின் கடவுளான யகோவை பிராத்தனையின் மூலம் அழைக்கும் நிகழ்வு ‘ஓவல்’ அறையில் நடைபெற்றது, அதாவது இங்கே பார்ப்பனர்கள் நடக்கும் யாகம் போன்றதுதான்!
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான ‘ஓவலில்’ ஒன்றுகூடிய யூதச்சாமியார்கள்,
”யகோவாவே! டோனால்ட் டிரம்பின் மீது சிறிய கீறல் கூட விழாமல் பார்த்துக்கொள்ளும் – அவரது உதிரம் தரையில் கொட்டினால் அது இந்த பூமிக்கும் பேரழிவைத்தரும்!
மீண்டும் புதிய உலகைப்படைக்கும் சாத்தானின் திட்டத்தை முறியடியுங்கள் யகோவா!. சாத்தான்களின் தூண்டுதலால் சாத்தான்களின் பிள்ளை களை பாதாளத்தில் இருந்து விழித்து மேலே வந்துவிட்டார்கள்!
அவர்களை ஒடுக்கும் பணியை டிரம்பிடம் ஒப்படையுங்கள் யகோவே யூதக்குடையின் கீழ் இந்த உலகை மீண்டும் ஒருமுறை கொண்டுவாருங்கள் சாத்தான்களால் மரணிக்கும் ஓவ்வோரு யூதர்களின் உடலுக்கும் ஆயிரம் சாத்தான்களின் பிள்ளைகள் உடலை எடுத்துக்கொள் என்று கூறி காட்டுக்கூச்சலாய் வேண்டினார்கள்.
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ வெள்ளை மாளிகை ஓவல் அறை என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகளை எடுத்த புகழைக் கொண்ட அறை ஆகும்
இரண்டு உலகப்போர் முடிவு, ‘ஜப்பான் மீது அணுகுண்டுவீச்சு’, ‘வியட்நாம் – ஈரான்’ போர் ‘ஒசாமா, பின்லேடன் மரணம்’ என பல நிகழ்வுகளை நடந்த முடிவெடுக்கப்பட்ட அதே அறை!
அதேபோல்தான் இந்தியாவிலேயும் பண மதிப் பிழப்பு உள்ளிட்ட பல சிக்கலான நேரத்தில் மோடிக்கு ஆதரவாத அனைத்து சங்கராச்சாரியார்களும் சேர்ந்து அரித்துவாரில் யாகம் செய்து புனிதநீரை மோடிக்கு அனுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *