புதுமை இலக்கியத் தென்றல் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

  1. நிகழ்ச்சிகளுக்கு அதிக இளைஞர்கள் வரும் வகையில், கல்லூரி மாணவர்களிடம் நிகழ்ச்சிக்கான துண்டறிக்கைகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று முடிவெடுக்கப்படுகிறது.
  2. மாதத்தில் ஒரு நிகழ்ச்சி கட்டாயம் புதிய இளைஞர்களுக்கான அமர்வாக தனிச் சொற்பொழிவாகவோ கருத்தரங்காகவோ பட்டிமன்றமாகவோ அல்லது வழக்காடு மன்றமாகவோ நடத்துவது என்று முடிவு எடுக்கப்படுகிறது.
  3. புரட்சிக் கவிஞர் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தி, ஏப்ரல் மாதத்தில் புரட்சிக் கவிஞர் விழாவை மிகச் சிறப்பான முறையில் நடத்தி அதில் பரிசளிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது.
  4. அன்னை மணியம்மையார் பிறந்த நாளை முன்னிட்டு இயக்க குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளை அவரவர் வயதுக்கு ஏற்ப தனித்தனியாக நடத்தி, அன்னை மணியம்மையார் பிறந்த நாள் அல்லது நினைவு நாள் நிகழ்ச்சியின்போது பரிசளிப்பது என்று முடிவு எடுக்கப்படுகிறது அதற்கான தனிக்குழுவை நியமிக்கவும் முடிவு செய்யப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள்

நெறியாளர்: புலவர் வெற்றியழகனார்

தலைவர்: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம்

துணைத் தலைவர்கள் : கவிஞர் வாசல் எழிலன், எழுத்தாளர் கோ.பிச்சை வள்ளிநாயகம், தங்க. தனலட்சுமி, மா.இராசு

செயலாளர்: பேராசிரியர் தனராசு

துணைச் செயலாளர்கள்: கி.குமார், அரும்பாக்கம் சா.தாமோதரன்

பொருளாளர்: மு.இரா.மாணிக்கம்

செயற்குழு உறுப்பினர்கள்: இராவணன் மல்லிகா, மு.வேலவன், கோ. தட்சணாமூர்த்தி, க.இளவழகன், பொறியாளர் ஆறுமுகம், அயன்புரம் துரைராஜ், தி.ஞானபாலன்

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *