மார்ச் 3: உயர் அதிகாரப் பதவிகளில் உயர்ஜாதி ஆதிக்கமா? கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!

3 Min Read
  • வாழ்க வாழ்க வாழ்கவே

   தந்தை பெரியார் வாழ்கவே!

  • வாழ்க வாழ்க வாழ்கவே

   அன்னை மணியம்மையார் வாழ்கவே!

  • வாழ்க வாழ்க வாழ்கவே

   தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்கவே!

  • வாழ்க வாழ்க வாழ்கவே

   சமூகநீதிப் போராளிகள் வாழ்கவே!

  • வெல்லட்டும்! வெல்லட்டும்!

   சமூகநீதி வெல்லட்டும்!

  • வீழட்டும்! வீழட்டும்!

   ஆரிய ஆதிக்கம் வீழட்டும்!

  • உறுதி செய், உறுதி செய்!

   ஒன்றிய அரசே உறுதி செய்!

   உயர் அதிகாரப் பதவிகளில்

   ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்

   இடஒதுக்கீட்டை உறுதி செய்!

  • தேவை! தேவை!

   அனைத்துத் துறைகளிலும்

   இடஒதுக்கீடு தேவை!

  • அய்.ஏ.எஸ். எல்லாம் அவாளா?

   அடிமட்ட வேலைக்கு மட்டும் நம்மாளா?

  • அய்.பி.எஸ். எல்லாம் அவாளா?

   ‘ஆர்டர்லி’ மட்டும் நம்மாளா?

  • அய்.எஃப்.எஸ். எல்லாம் அவாளா?

   அட்டெண்டர் வேலை மட்டும் நம்மாளா?

  • ஒன்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அரசே!

   ஏமாற்றாதே, ஏமாற்றாதே!

   இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல்

   ஏமாற்றாதே, ஏமாற்றாதே!

  • அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ்., பதவிகளென்றால்

   அக்கிரகாரக் கூடாரங்களா?

   அய்.எஃப்.எஸ் பதவியில் எல்லாம்

   அவாளுக்கு மட்டும் விசாக்களா?

  • இந்தியப் பிரதமர் அலுவலகமா?

   அக்கிரகாரக் கூடாரமா?

  • எங்கே எங்கே இடஒதுக்கீடு?

   உயர் பதவிகளில் இடஒதுக்கீடு!

  • அமல்படுத்து! அமல்படுத்து!

   மண்டல் கமிஷன் பரிந்துரையை

   முழுமையாக அமல்படுத்து!

  • ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது!

   உயர் அதிகாரம் இல்லாமல்

   சமூகநீதிச் சமர் முடியாது!

  • நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து!

   இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்து!

   உயர் அதிகாரப் பதவிகளில்

   ஒடுக்கப் பட்டோருக்கும்,

   பிற்படுத்தப் பட்டோருக்கும்

   சட்டப்படி இடஒதுக்கீட்டை

   முழுமையாக வழங்கிடு!

  • ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே!

   வெளியிடு, வெளியிடு!

   வெள்ளை அறிக்கை வெளியிடு!

   ஒன்றிய அரசின் பதவிகளில்

   உயர் அதிகாரப் பதவிகளில்

   இடஒதுக்கீட்டு விவரங்களை

   முழுமையாக வெளியிடு!

  • மறைக்காதே, மறைக்காதே!

   இடஒதுக்கீடு வழங்காமல்

   பார்ப்பன ஆதிக்கம் கோலோச்சுவதை

   மறைக்காதே, மறைக்காதே!

  • மறைப்பதேன், மறைப்பதேன்?

   ஒன்றிய அரசே மறைப்பதேன்?

   நாடாளுமன்றத்தில் மறைப்பதேன்?

   உயர் அதிகாரப் பதவிகளில்

   இடஒதுக்கீட்டின் நிலைமையை

   மறைப்பதேன், மறைப்பதேன்?

  • அமைத்திடு, அமைத்திடு!

   சமூகநீதியைக் கண்காணிக்க

   அதிகாரமிக்க ஆணையத்தை

   அமைத்திடு, அமைத்திடு!

   ஒன்றிய அரசே அமைத்திடு!

  • பின்பற்று! பின்பற்று!

   திராவிட மாடலைப் பின்பற்று!

   ஒன்றிய பாஜக மோடி அரசே!

   சமூகநீதியை நிலைநாட்டுவதில்

   திராவிட மாடலைப் பின்பற்று!

  • கற்றுக் கொள்! கற்றுக்கொள்!

   பெரியார் மண்ணாம் தமிழ்நாட்டிலிருந்து

   ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற

   சமூகநீதியைக் கற்றுக் கொள்!

  • ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம்

   பார்ப்பனர் அல்லாதார் அனைவரும்

   ஓரணியில் ஒன்றுபடுவோம்!

   முறியடிப்போம், முறியடிப்போம்

   பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிப்போம்!

   உயர் அதிகாரப் பதவிகளில்

   பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிப்போம்!

  • EWS என்ற பெயரால்

   10 சதவிகித இடங்களை

   அபகரிக்கும் பார்ப்பனச் சதியை

   முறியடிப்போம், முறியடிப்போம்!

  • பார்ப்பனர் அல்லாத் தோழர்களே!

   திரண்டிடுவீர்! திரண்டிடுவீர்!

   அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும்

   அக்கிரகாரக் கொட்டத்தை

   முறியடிக்கத் திரண்டிடுவீர்!

  • எங்கள் தந்தை பெரியாரும்

   பாபாசாகேப் அம்பேத்கரும்

   தமிழர் தலைவர் ஆசிரியரும்

   பெற்றுத் தந்த சமூகநீதியை

   அழிக்கத் துடிக்கும் ஆரியத்தை

   விடமாட்டோம், விடமாட்டோம்!

  • போராடுவோம், வெற்றிபெறுவோம்

   வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

– திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *