சென்னை, ஏப். 14 புரட்சியாளர் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2023) காலை தஞ்சாவூரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னையில்…
சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முகப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு காலை 10 மணியளவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சமத்துவ நாள் உறுதிமொழி
ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர் களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர் களுடைய சமத்துவத்திற்காகவும்,வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில், ஜாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ. வெங்க டேசன், சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ. கணேசன், துணைத் தலைவர் கி. இராமலிங்கம், அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், துணை அமைப்பாளர் சி. பாஸ்கர், மயிலை ஆர்.மாரிமுத்து, பன்னீர் செல்வம், ஜெயக்குமார், வில்லிவாக்கம் ச. இராசேந்திரன், செல்லப்பன், மு.இரா. மாணிக்கம், வேலூர் பாண்டு, ஆவடி மாவட்டம் ப.க. துணை செயலாளர் கார்த்திகேயன், சமிக்ஷா, த. மரகதமணி, வண்ணை குணசேகரன், க. கலைமணி, வை. கலையரசன், நா. பார்த்திபன், வ.கலைச்செல்வன், அருள், பெ. அன்பரசன், அ. பாலச்சந்தர் மற்றும் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.