‘சிக்கன் ரோடு’ என்ற பெயரில் அரங்கேறும் புது மோசடி – எச்சரிக்கை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.26- ‘குறைவான இந்திய பணத்தை முதலீடு செய்து, வெளிநாட்டு பணத்தை அதிகம் சம்பாதிக்கலாம்’ என கூறி, ‘சிக்கன் ரோடு’ என்ற பெயரில் மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது.

ஆன்லைன் வேலை, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என, பல வகைகளில், அன்றாடம் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், இவற்றை தடுக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், மோசடி கும்பல், புதுப்புது வழிகளில் மோசடி செய்து, பணத்தை பறித்து வருகிறது.

அந்த வகையில், அண்மை நாட்களாக, இந்திய பணத்தை முதலீடு செய்து விளையாடினால், ‘யூரோ கரன்சியில் நிறைய சம்பாதிக்கலாம்’ என கூறி, மோசடிக் கும்பல் புது மோசடியை அரங்கேற்றி வருகிறது.

இது குறித்து, சைபர் வல்லுநர்கள் சிலர் கூறியதாவது:

‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக வலைதளங்களில், ‘சிக்கன் ரோடு’ என்ற பெயரில், செயலி ஒன்று பிரபலப்படுத்தப்படுகிறது. அதில், இந்தியர்கள், குறைந்த தொகையை செலுத்தி விளையாடினால், யூரோ கரன்சியில் நல்ல லாபம் கிடைக்கும் என விளம்பரப்படுத்துகின்றனர். இந்த செயலி, ‘ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில்’ தடை செய்யப்பட்டுள்ளது.

விபரம் தெரியாதவர்கள், குறைந்த பட்சம் 3,000 ரூபாயில் துவங்கி, லட்சங்களில் பணத்தை இழந்து வருகின்றனர். இது மட்டுமின்றி அங்கீகரிக்கப்படாத செயலியை பதிவிறக்கம் செய்வது, நம் வங்கி உள்ளிட்ட, தனிப்பட்ட தகவல்கள்கள் திருடப்படும்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *