மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு செங்கொடி போர்த்தி வீர வணக்கம் செய்த கருப்புச் சட்டை! வரலாறாக வாழுகிறார்! கொள்கைப் பயணம் தொடரட்டும்! தமிழர் தலைவர் எழுப்பிய உணர்ச்சி முழக்கம்!

1 Min Read

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின்  உடலுக்கு நேற்று (25.2.2026) செங்கொடியைப் போர்த்தி, மலர்மாலை வைத்து மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,

‘‘வீர வணக்கம், வீர வணக்கம்!

என்றும் வாழுகிறார்,

என்றும் வாழுகிறார், மறையவில்லை!

எங்கள் ரத்தத்தில் உறைந்தார்;

உள்ளத்தில் நிறைந்தார்!

வாழுகிறார், வரலாறானார்! வரலாறானார்!

பணி முடிப்போம்! பணி முடிப்போம்!!

கொள்கைப் பணி முடிப்போம்!

அவரது லட்சியத்தின் கொள்கைப் பயணம் தொடரட்டும்!

தொடரட்டும், தொடரட்டும்!’’

என முழக்கமிட்டார்!

அதனைக் கேட்டு, உணர்ச்சிப் பெருவெள்ளத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், ‘ஜனசக்தி’ ஆசிரியர் திருப்பூர் சுப்பராயன் எம்.பி., திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்ட திரண்டிருந்த தோழர்கள் அனைவரும் மீண்டும் முழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *