திராவிடர் கழக பட்டுக் கோட்டை மாவட்ட தலைவர் பேராவூரணி மல்லிகை வை.சிதம்பரம்,வை. நீலசுந்தரம் (திமுக), வை.சுவாமிநாதன், (அதி.மு.க) ஆகியோரின் மூத்த சகோதரர்-மருத்துவர் சூர்யா, வழக்குரைஞர் பாலாஜி, பொறியாளர் சுமதி ஆகியோரின் தந்தையார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், பேராவூரணி மல்லிகை அச்சக உரிமையாளர், அம்மையாண்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகை வை.முத்துராமலிங்கம் (வயது 65) உடல் நலக்குறைவால் 23-02-2026 அன்று மாலை தஞ்சை தனியார் மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
இன்று (24-02-2026) மாலை பேராவூரணியை அடுத்த அம்மையாண்டி இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படும்.
தமிழர் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்
மறைவுச் செய்தி அறிந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் பேராவூரணி சிதம்பரம் அவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தனர்
தொடர்புக்கு: வை.சிதம்பரம் 9443699500
