இஸ்லாமியர்களுக்கான 5 சதவீத இட ஒதுக்கீடு பறிப்பு இஸ்லாமியர்களுக்கு தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த ரமலான் பரிசு?

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, பிப்.20 மகாராட்டிராவில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டைச் செல்லாது என அறிவித்து, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

2014 அறிமுகம்: அப்போதைய காங்கிரஸ் – என்சிபி (NCP) கூட்டணி அரசு, முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை விசாரணை செய்த மும்பை உயர்நீதிமன்றம் இதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் திடீரென  தேவேந்திர பட்னாவிஸ் அரசு இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அரசின் இந்த முடிவிற்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஒருபுறம் ‘அனைவருக்குமான வளர்ச்சி’ என்று பேசிக்கொண்டு, மறுபுறம் பின்தங்கிய சமூகத்தினரின் உரிமைகளைப் பறிப்பது இந்த அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.” என்று மத்திய மும்பை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வர்ஷா கெய்க்வாட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எம்.பி.ஏ. படிப்பில் சேர்க்கை

இணையதளத்தில்  தேர்வு முடிவுகள்

சென்னை, பிப்.20 உயர்கல்வி நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேருவதற்கான சிமேட் தேர்வு கடந்த ஜன. 25-ஆம் தேதி நாடு முழுவதும் 259 மய்யங்களில் கணினிவழியில் நடை பெற்றது. 53,453 மாணவர்கள் பதிவு செய்த நிலையில், 41,872 (78.33 சதவீதம்) பங்கேற்றனர்.

இந்நிலையில், https://cmat. nta.nic.in என்ற இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை என் டிஏ தற்போது வெளி யிட்டுள்ளது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 011-40759000 என்ற தொலைபேசி எண், [email protected] மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற தளத்தில் அறியலாம்.

பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து

474 அரசியல் கட்சிகள் நீக்கம்

தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

சென்னை, பிப்.20 நாடு முழுவதும் கடந்த ஆண்டுகளாக எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத செலவுக் கணக்கை தாக்கல் செய்யாத, தேர்தல் ஆணைய விதிகளை மீறிய 474 அரசியல் கட்சி களை பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து  நீக்கி தேர்தல் ஆணையம் கடந்த 2025 செப்டம்பர் 19ஆம் தேதி உத்தரவிட்டது.

செயல்படாத கட்சிகள் வரிச் சலுகைகளைப் பெறுவதையும், பண மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது

மாநில வாரியான விவரங்கள் (சில முக்கிய மாநிலங்கள்): உத்தரப் பிரதேசத்தில் அதிக பட்சமாகக் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. மாநிலம் நீக்கப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை உத்தரப் பிரதேசம் 121, மகாராட்டிரா 44, தமிழ்நாடு 42, டில்லி 40, மத்திய பிரதேசம் 23.

தமிழ்நாட்டின் நிலை: தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட 42 கட்சிகளில் சில முக்கியக் கட்சிகளும் அடங்கும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்துச் சில கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இருப்பினும், பிப்ரவரி 18, 2026 அன்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த நீக்கத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது என்பது குறிப் பிடத்தக்கது.

இதன் விளைவு: நீக்கப்பட்ட கட்சிகள் இனி தேர்தல் சின்னங்கள், வரி விலக்கு மற்றும் இலவச வாக்காளர் பட்டியல் போன்ற சலுகைகளை அனுபவிக்க முடியாது.

 

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *