திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

லால்குடி,பிப்.19- “ஆரோக்கியமான சமுதாயத்திற்கு நலமான இளைஞர்கள்” என்னும் மய்யக் கருத்தைக் கொண்டு நடத்தும் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக 15.02.2026 அன்று காலை 9 மணியளவில் நொச்சியம், மாதவ பெருமாள் கோயில் விஜயா நகரில் இலவச பொது மருத்துவ முகாம்  நடைபெற்றது.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்களின் வழிகாட்டுதலில் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி பத்மநாபன் மற்றும் கவுன்சிலர் கோபி ஆகியோர் முன்னிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையின் மேனாள் காது, மூக்கு, தொண்டை  சிறப்பு மருத்துவர் மரு. ஆ.கனகராஜ் மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மருத்துவ அலுவலர் மரு. ஆர்.முனவர் சுல்தானா ஆகியோர் தலைமையில் பொது மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் 25  ஆண்கள் மற்றும் 45 பெண்கள் என மொத்தம் 70 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இம் மருத்துவ முகாமில் செவிலியர்கள் காமாட்சி, ஹேமமாலினி மற்றும் செவிலிய உதவியாளர் சுல்தான் பீவி ஆகியோர் பொதுமக்களுக்கு உடல் எடை, இரத்தச் சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பு போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டனர். மருத்துவப் பயனாளிகளுக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பளித்திட்ட அலுவலர் பேரா. ஜெசிமா பேகம், பேரா ஏஞ்சலினா ஜெனிஃபர் சாமி, பேரா. தினேஷ் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மருந்து மாத்திரைகளை வழங்கி முகாமினை ஒருங்கிணைத்தனர்.

திராவிடர் கழக காப்பாளர் ப.ஆல்பர்ட், முழு உறுதுணை யுடனும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் பிச்சை மணி, நகர செயலாளர் பாலசந்தர் மற்றும் திராவிடர் கழக தோழர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்புடனும்   இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பாலசுப்ரமணியன் இல்லத்தில் அவர்களின் குடும்ப  உறுப்பினர்களின் உதவியுடன் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *