அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பதவிகளில் முற்றிலும் சமூகநீதி புறக்கணிப்பு! ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் தரும் தகவல்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, பிப்.18 அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் பதவிகளுக்கு (All India Services) அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியில் உள்ள அதிகாரிகள், சமூக பிரதிநிதித்துவம் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்து ஒன்றிய அரசு மாநிலங்களவையில் தகவல் வெளியிட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேரளாவின் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஒன்றியப் பணியாளர், பொதுக் குறைதீர் மற்றும் ஓய்வூதியத்துறை இணை அமைச்சரும், பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், இது தொடர்பான விவரங்களை அறிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது:

இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய அயல்தொடர்புப் பணி (IFS) உள்ளிட்ட அகில இந்திய சேவைகளில் அனு மதிக்கப்பட்ட மொத்தப் பணியிடங்கள் மற்றும் தற்போதைய பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய சேவை வாரியான, மாநில வாரியான விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள 6877 இந்திய ஆட்சிப் பணி, 5099 இந்திய காவல் பணி, 393 இந்திய அயல்நாட்டு பணி ஆகியவற்றில் முறையே 5577, 4594, 2164 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த அய்ந்து ஆண்டுகளில் 2020 முதல் 2024 வரை) நடத்தப்பட்ட குடிமைப் பணி தேர்வுகளில் நேரடி நியமனமாக IAS, IPS, IFS சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலின்படி, அட்ட வணைப் ஜாதி (SC), அட்டவணை பழங்குடி (ST), பிற்படுத் தப்பட்ட வகுப்புகள் (OBC) சார்ந்த நபர்களின் எண்ணிக்கைகளும் தரப்பட்டுள்ளன. (7 ஆம் பக்கம் பட்டியல் காண்க).

01.01.2025 நிலவரப்படி, IAS, IPS, IFS சேவைகளில் மாநிலக் கட்டமைப்பு வாரியாக உள்ள காலிப்பணியிட விவரங்கள் சிவில் லிஸ்ட் (Civil List) அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதன்படி 1300 இந்திய ஆட்சிப் பணியிடங்களும், 505 இந்திய காவல் பணியிடங்களும், 1029 இந்திய அயலுறவுப் பணி யிடங்களும் காலியாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

அகில இந்திய சேவைகளில் சமூக நீதி, சமச்சீர் பிரதிநிதித்துவம் மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்துவரும் நிலையில், இந்த தகவல்கள் அரசின் அதிகாரப்பூர்வ பதிலாக பதிவாகியுள்ளன.

ஒன்றிய அரசு தந்துள்ள தகவல்களின்படி, சமூக நீதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அய்.ஏ.எஸ்.சில் 8% அய்.பி.எஸ்.சில் 10%, அய்.எஃப்.எஸ்.சில் 17.28% மட்டுமே பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவு அதிகாரிகள் இருப்பதும் எஞ்சியுள்ள 82% முதல் 92 சதவிகிதம் வரையிலான இடங்கள் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்ஜாதியினரால் அபகரிக்கப்பட்டிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *