மூடத்தனத்தின் விபரீதம் வேலூர் மயானக் கொள்ளையில் 60 அடி உயரத் தேர் கவிழ்ந்து விபத்து!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தேரின் அடியில் சிக்கித் தவித்த 10-க்கும் மேற்பட்டோர் மீட்பு!

வேலூர், பிப்.17 வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற மயானக் கொள்ளையில், 60 அடி உயரத் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

ஆண்டுதோறும் மகா சிவராத் திரிக்கு மறுநாள் நடைபெறும் மயானக் கொள்ளையை முன் னிட்டு, வேலூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப் பட்ட தேர்களில் அம்மன் சிலைகள் ஊர்வலமாகப் பாலாற்றங்கரைக்குக் கொண்டு வரப்பட்டன. மாலையில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில், ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த தேரும் பாலாற்றில் இறங்கி ‘சூறை யிட்டன.

திடீரென சரிந்த தேர்

நேற்றிரவு சுமார் 11.40 மணி யளவில், கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் சூறையிடும் நிகழ்வை முடித்துவிட்டு, பாலாற்றில் இருந்து மேம்பால சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாகத் தேரின் நிலை தடுமாறி திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் தேரின் மீது அமர்ந்திருந்த
10-க்கும் மேற்பட்டோர் தேரின் அடியில் சிக்கித் தவித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, தேரின் அடியில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த 7-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சிவராமன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *