ஒன்றிய பிஜேபி அரசின் இரட்டை வேடம் கலைந்தது! ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் : இந்தியாவின் ஒப்புதலைப் பெற்றதாக அமெரிக்கா கருத்து!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வாசிங்டன், பிப்.16- ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான உறுதிப்பாட்டை இந்தியாவிடம் பெற்றுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ நேற்று (15.2.2026) தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலன் கருதியே எரிசக்தி கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும், எரிசக்தி பாதுகாப்பில் நாட்டு மக்களின் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கான உறுதிப்பாட்டை பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் (பிப். 2) இந்தியா உடனான வணிக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தார்.

இதன்படி, இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அதிகப்படியான 25% வரி, 18 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. இதோடு மட்டுமின்றி ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் விதிக்கப்பட்ட கூடுதலான 25% வரியும் நீக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை, நிலக்கரி, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்தவும் இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை கைவிட வேண்டும் என இந்தியாவிடம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக முனிச் பாதுகாப்பு மாநாட்டில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ பேசுகையில், இந்தியா உடனான பேச்சுவார்த்தையில் ரஷியாவிடமிருந்து கூடுதல் எண்ணெய் பெறுவதை நிறுத்துவதற்காக உறுதிப்பாட்டைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

ரஷியாவிடமிருந்து மட்டுமின்றி இன்னும் சில நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய்யை பெற்று வருவதாக அமெரிக்காவிடம் இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *