முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்தனர்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வரவு
பெண்கள் பெரும் மகிழ்ச்சி!

சென்னை, பிப்.14- மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

ரூ.5 ஆயிரம் பணம் வரவு

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளான 1கோடியே 31 லட்சம் பெண்கள் வங்கிக் கணக்கில் நேற்று (13.2.2026) காலை ரூ.5 ஆயிரம் பணம் வரவு வைக்கப்பட்டது. அவர்கள் இன்ப அதிர்ச்சியில் திளைத்த வேளையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிப் பதிவை வெளியிட்டார்.

அதில் அவர், ‘பிப்ரவரி மாதத்துக்கு மட் டுமல்லாமல் அடுத்த 2 மாதங்களுக்கான (மார்ச், ஏப்ரல்) மகளிர் உரிமைத்தொகை தவணைகளை சேர்த்து ரூ.3 ஆயிரமும், கோடைக்காலச் செலவுக்காக ரூ.2 ஆயிரம் சிறப்புத் தொகையும் சேர்த்து மொத்தம் ரூ.5 ஆயிரம் சிறப்பு மகளிர் உரிமைத் தொகையாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று கூறி ‘சஸ்பென்சை’ உடைத்தார்.

ரூ.5 ஆயிரம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் பெண்களும், தி.மு.க. மகளிரணி யினரும் நேற்று (13.2.2026) காலை முதலே திரண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்காக காத்திருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1 மணியளவில் அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தார். பட்டாசுக்கள் வெடித்தும், மேள-தாளங்கள் முழங்க மகளிரணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நெகிழ்ச்சியுடன் நன்றி

அண்ணா அறிவாலய வளாகத்தில் பெண்கள், மகளிரணி யினர் திரண்டு இருப்பதை பார்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உற்சாகம் அடைந்தார். அவருக்கு பெண்களும், மகளிரணியினரும் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்கள்.

ஆரவாரத்துடன் வாழ்த்து முழக்கங்களையும் எழுப்பினார்கள். சிலபெண்கள் கையில் ரூ.5 ஆயிரம் பணத்தை காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அவர்களிடம், இந்தப் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண் டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று மகளிரணியினர் வைத்திருந்த பதாகைகளில், ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’, ‘நீ ஆயிரம் ரூபாயை நிறுத்த முயற்சித்தால், நான் என் மக்களுக்கு ரூ.5 ஆயிரம் ஆக தருவேன் தலைவர் எம்.கே.எஸ்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *