சென்னை, பிப். 13 இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றம் வேகமாக முன்னேறி வரும் நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எக்ஸ்போ 2026 வரும் பிப்ரவரி 12 முதல் 14 வரை சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெற்று வருகிறது. Water Today Pvt. Ltd. நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த எக்ஸ்போவின் எட்டாவது பதிப்பில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த B2B கண்காட்சி, புதுப்பிக்கத்தக்க மற்றும் சூரிய எரிசக்தி, கிரிட் மற்றும் மீட்டரிங் தொழில்நுட்பங்கள், பசுமை ஹைட்ரஜன், கலப்பு (ஹைப்ரிட்) எரிசக்தி அமைப்புகள், எரிசக்தி சேமிப்பு, பேட்டரி கட்டமைப்பு, இ-மொபிலிட்டி, மின்சார வாகன (EV) சார்ஜிங் தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்துறை எரிசக்தி பயனர்கள், திட்ட மேம்பாட்டாளர்கள், EPC ஒப்பந்ததாரர்கள், யூட்டிலிட்டி நிறுவனங்கள், OEMகள், ஆலோசகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிலைத்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. அளவுக்கேற்ற மற்றும் செலவு குறைந்த எரிசக்தி தீர்வுகளை தேடும் நிறுவனங்களுக்கு இது பயனளிக்கும்.
வணிக பார்வையாளர்களுக்கு, Renewable Energy Expo 2026 தீர்வு வழங்குநர்கள், தொழில்நுட்ப புதுமையாளர்கள் மற்றும் முடிவெடுப்பாளர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.
ஒரே இடத்தில் திட்ட விவாதங்கள், சப்ளையர் மதிப்பீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் உருவாக்க முடியும். பங்கேற்பாளர்கள் முழுமையான தீர்வுகளை ஆராய, புதிய விற்பனையாளர்களை கண்டறிய, சந்தைக்கு தயாரான தொழில்நுட்பங்களை அறிந்து, நிலைத்த வளர்ச்சி மற்றும் கார்பன் குறைப்பு இலக்குகளை வேகமாக அடைய முடியும்.
