தஞ்சை இரா.ஜெயக்குமார் – லெ.ஜெகதாராணி இணையரின் ‘‘கவுசல்யா நினைவு கவின் – காவியா” இல்லத்தினை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ராகு காலத்தில் அறிமுகம் செய்து வைத்து, கழகக் கொடியேற்றி, வாஸ்து மோசடியை அம்பலப்படுத்தினார் கழகத் தலைவர்!

தஞ்சை, பிப்.11 ”தந்தை பெரியாரின் கொள்கைக் குடும்பம், குருதிக் குடும்பம், கல்வி குடும்பம் மூன்றும் இணைந்து முப்பெரும் விழாவாக இல்லம் அறிமுக விழா நடைபெறுவது மிகவும் சிறப்புக்குரியது” என்றும், ”பெரியாரியத்தைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்” என்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், இல்ல அறிமுக விழாவில் உரையாற்றியபோது குறிப்பிட்டார்.

புதிய இல்லத்திற்கான கல்வெட்டைத் திறந்து வைத்தார் கழகத் தலைவர்!

திராவிடர் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் – லெ.ஜெகதாராணி ஆகியோரின் புதிய இல்லம் – ‘‘கவுசல்யா நினைவு, கவின் – காவியா இல்லம்” எனும் பெயரில்,  தஞ்சாவூர், மாதாக்கோட்டை, அடைக்கல மாதா நகரில் 7.02.2026 அன்று காலை 10 மணியளவில், அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகத் தலைவரை வரவேற்கும் விதத்தில் கட்டப்பட்டிருந்த கழகக் கொடிகளும், பதாகைகளும் அவரை மட்டுமல்ல நிகழ்விடத்திலிருந்து முதன்மைச் சாலை வரையிலும் கட்டப்பட்டு கவனம் ஈர்த்து, அனைவரையும் வருக! வருக! என்று வரவேற்பு செய்து கொண்டிருந்தன. கழகத் தலைவர் சரியாக 10 மணிக்கு நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். அவருக்கு தஞ்சை மாவட்டத் தோழர்களால் கொள்கை ஒலி முழக்கங்களோடு எழுச்சிகரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெயக்குமார் – ஜெகதா ராணி ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் சூழ, இல்லத்தை அறிமுகம் செய்து வைக்கும் முகத்தான், கழகத் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள், புதிய இல்லத்திற்கான கல்வெட்டைத் திறந்து வைத்து, கழகக் கொடியையும் ஏற்றி வைத்தார். புதிய இல்லத்திற்கு எதிரில், நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவரையும் தஞ்சை மாநகர துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி வரவேற்றுச் சிறப்பித்தார். தலைமை ஏற்றிருந்த கழகத் தலைவர் நிறைவாக வழிகாட்டும் உரையாற்றினார். மாநகரத் தலைவர் தமிழ்ச்செல்வன் இணைப்புரை வழங்கி நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். நிகழ்ச்சியில் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை
இரா.குணசேகரன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் பி.ஜி. இராஜேந்திரன், ‘விடுதலை’ வாசகர் வட்டம் புரவலர் பொறியாளர் சிவானந்தா, தஞ்சாவூர் மகாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளர் ஆசிப் அலி, தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மேனாள் அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் மற்றும் அனைத்து மாவட்டத் தலைவர்கள் சார்பில் மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், தென்மாவட்டங்களின் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் மதுரை செல்வம், தி.மு.க. தஞ்சை மத்திய மாவட்டப் பொறுப்பாளர் எல்.ஜி.அண்ணா, அனைத்து மாவட்டக் காப்பாளர்கள் சார்பில் அய்யனார், அனைத்து ஒன்றியங்களின் சார்பில் ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர் இரா.துரைராசு, அனைத்து மாவட்டச் செயலாளர்கள் சார்பில் தஞ்சை அருணகிரி,தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன், திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி, சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், தமிழ்நாடு அரசின் மருத்துவ கவுன்சில் மேனாள் இயக்குநர் மருத்துவர் கலைச்செல்வி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

கழகத் தலைவர் மூலம் மரியாதை!

கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை
இரா.ஜெயக்குமார் உரையாற்றும் போது, தான் கழகத் தலைவரின் ஆணையை ஏற்று, ‘பெரியார் உலகம்’ நிதியளிப்பு விழாக்கள் தொடர்பாக வெளியூர் சென்று விட்டதாகவும். கியூபா கன்ஸ்ட்ரக்சன் சார்பில் பொறி யாளர் புனிதா முழு பொறுப்பு எடுத்துக் கொண்டு வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளதாகவும் கூறி, புனிதா- வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர்), மகள் கியூபா ஆகியோருக்கு கழகத் தலைவர் மூலம் மரியாதை செய்வித்தார். அத்துடன் இல்லம் உருவாவதற்கு உறு துணையாக இருந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி ஜெயந்தி, தனது தந்தையார் ராமசாமி, இணையரின் பெற்றோர் லட்சுமணன், ரூபாவதி உள்ளிட்டோருக்கு கழகத் தலைவர் மூலம் மரியாதை செய்துவைத்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கழகத் தலைவருக்கு மரியாதை செய்யப்பட்டது. கழகத் தலைவர் மேடையில் இருந்த ஆளுமைகளுக்கு மரியாதை செய்து வைத்தார். நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

ஆசிரியர் தனது உரையில், “குருதிக் குடும்பத்தை குறைவாக மதிப்பிடவில்லை என்றாலும், அதைவிட கொள்கைக் குடும்பம் சிறப்பானது. அத்துடன், குருதிக் குடும்பம் மற்றும் கொள்கைக் குடும்பம் மட்டுமின்றி கல்விக் குடும்பமும் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளன” என்று ஜெயக்குமார் இணையர், ஜெகதாராணி பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) ஜெகதாராணி பணியாற்றுகிறார்” என்பதைச் சுட்டிக்காட்டி, கல்விக்குடும்பம் என்று சொன்னதற்கும் காரணம் சொன்னார். அத்துடன், தஞ்சை மாவட்டத்தின் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்களுக்கு, 80 ஆம் ஆண்டு பிறந்த நாளை யும் சேர்த்து கொண்டாடுகிறோம் என்று ஒருங்கி ணைப்பாளர் ஜெயக்குமார் அறிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டி, அதைப் பாராட்டினார்! தஞ்சை மாவட்டத் தலைவரை வாழ்த்தினார்!

பெரியாரியத்தைக் கடைப்பிடித்து வெற்றி பெற்றிருக்கிறார் ஜெயக்குமார்!

“பொது வாழ்க்கைக்கு கலைஞர் வந்ததை அவருடைய குடும்பத்தினர், “இவன் உருப்படுவானா?” என்று ‘சாபம்’ கொடுத்ததையும், கலைஞர் முதல மைச்சராக வந்த பின், தந்தை பெரியாரின் இரண்டாவது சிலை திறப்பு விழாவில் பேசும் போது, தனது குடும்பத்தினர் ‘சாபம்’ கொடுத்ததைச் சுட்டிக்காட்டி, “நான் உருப்பட்டேனா? இல்லையா? என்பதை ஊரறியும், உலகறியும்” என்று பொதுமக்களின் முன்னி லையில் சொன்னதை நினைவூட்டி, அப்படித்தான் ஜெயக்குமாரும் பெரியாரியத்தைக் கடைப்பிடித்து வெற்றி பெற்றிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

ராகு காலத்தில், நவமியில் நடைபெற்றிருக்கிறது!

மேலும், “இந்தப் பெருமை முழுக்க முழுக்க ஜெயக்குமாரின் இணையர் ஜெகதாராணி அவர்க ளையே சாரும்” என்றும் பாராட்டினார். வீட்டினுள் சிறு நூலகம் இருந்ததைக் குறிப்பிட்டு, “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில், நூலகத்திற்கு புத்தகங்களை வழங்குகிறோம்” என்று, ஜெயக்குமார் – ஜெகதாராணி குடும்பத்தினரிடம் புத்தகங்களை வழங்கினார். அத்துடன் ‘‘இல்லம் அறிமுகம் என்பது சனிக்கிழமையில், ராகு காலத்தில், நவமியில் நடைபெற்றிருக்கிறது” என்று குறிப்பிட்டு, ‘‘மூடநம்பிக்கை ஒழிப்பும் இதில் நடைபெற்றிருக்கிறது” என்று சுட்டிக்காட்டியதோடு, அதன் தொடர்ச்சியாக, வாஸ்து சாஸ்திரம் என்கிற பெயரில் நடைபெற்று வரும் மூடநம்பிக்கைகளையும் விளக்கி, அதைக் கடுமையாகக் கண்டித்து, ‘‘பெரியாரியத்தை பின் பற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் மகள், கவின் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

நிகழ்வில் மாவட்டத் தலைவர்கள் ராஜபாளையம் சிவக்குமார், அரியலூர் விடுதலை நீலமேகம், திருச்சி ஆரோக்கியராஜ், கும்பகோணம் நிம்மதி, திருவாரூர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி, நாகை வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், புதுக்கோட்டை அறி வொளி, அறந்தாங்கி மாரிமுத்து, விருத்தாசலம் இளந்திரையன், மாவட்டச் செயலாளர்கள் நாகை பூபேஷ்குப்தா, கும்பகோணம் துரைராசு, சிதம்பரம் பெரியார் தாசன், விருத்தாச்சலம் வெற்றிச்செல்வன், அறந்தாங்கி குமார், அரியலூர் கோபாலகிருஷ்ணன், புதுக்கோட்டை வீரப்பன், தலைமை செயற்குழு உறுப்பி னர் ஆண்டிமடம் சிந்தனைச் செல்வன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில மாணவர் கழகச் செயலாளர் செந்தூரபாண்டியன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தங்க சிவமூர்த்தி, கோபு.பழனிவேல், மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், காப்பாளர்கள் வேதா, நாகை முருகையன், கும்பகோணம் இளங்கோவன்,  இரா.செந்தில்குமார், செ.கலாலெட்சுமி, நல்லாசிரியர் கோ.செந்தமிழ்ச்செல்வி, ஆசிரியர் இரா.சிவக்குமார், இரா.வெற்றிக்குமார், மா.இராமசாமி, ந.லெட்சுமணன், லெ.ஜெய நளினி, க.செ.கபிலன், க.செ.கவுசல்யா, செ;சி.காவியன், செ;.சி.கண்மணி, அ.வெ.கயல், அ.வெ.கருணாநிதி, தமிழரசி கலியபெருமாள், இரா.புவ னேஸ்வரி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், தஞ்சை மாநகரச் செயலாளர் வீரக்குமார், மாநில கலைத்துறைச் செயலாளர் சித்தார்த்தன், கழக சொற்பொழிவாளர்கள் பெரியார் செல்வன், இராம.அன்பழகன், உடுமலை வடிவேல், முத்துராஜா, சாந்த குமார், புகழேந்தி உள்ளிட்ட தோழர்கள், பொறுப்பா ளர்கள், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சிப் பிர முகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *