ஒன்றிய நிதிநிலை அறிக்கையால் விவசாயி களுக்கு வருமான உயர்வுக்கு வழி இல்லை என்று வேளாண் துறை நிபுணர் நாராயண மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். அது வருமாறு:
வருமான உயர்வுக்கு வழியில்லை ஆயினும், இந்தப் பிரம்மாண்டமான திட்டங்ளுக்கு மத்தியில் ஒரு கசப்பான உண்மை ஒளிந்திருக்கிறது. பெரும் பகுதி விவசாயிகளின் இன்றைய முதன்மையான கவலை எதிர்காலத்தொழில்நுட்ப மாற்றங்களோ அல்லது 10 ஆண்டு காலத் திட்டங்களோ அல்ல; மாறாக, இன்றைய வருமான நெருக்கடியை எப்படிச் சரிசெய்வது என்பதுதான். இதுகுறித்து பட்ஜெட் மவுனம் காப்பது விவசாயிகளிடையே ஒரு விதஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்தை விலை வீழ்ச்சி; உரச்செலவு, கூலிச் செலவு அதிகரிப்பால் விவசாயிகள் நசுக்கப்பட்டு வரும் வேளை யில், சந்தை ஆதரவு, கொள்முதல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நேரடி நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் போதிய அளவில் இல்லை.குறிப்பாக, மொத்தச் சாகுபடிப் பரப்பளவில் ஏறக் குறைய 38%ஐக் கொண்டுள்ள, ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் (Nutri-Cereals),பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களைப்பயிரிடும் விவசாயிகளின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இவற்றுக்குத் தற்போதைய அரசு அதிக அளவில் குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) அறிவித்தாலும், முறையான, சீரான கொள்முதல் கட்டமைப்பு இல்லாததால், பெரும்பாலான விவசாயிகளுக்கு எம்எஸ்பி விலை கிடைப்பதில்லை. நெல், கோதுமைக்கு இருக்கும் வலுவான கொள்முதல் வசதி, மற்ற பயிர்களுக்கு இல்லை என்பது கசப்பான உண்மை. இதனால், விவசாயிகள் தங்கள்விளைபொருள்களை எம்எஸ்பிவிலைக்குக் கீழே விற்று நட்டமடைய வேண்டிய சூழல் நீடிக்கிறது. சமீபகாலமாகப் பல்வேறு காரணங்களைக் கணக்கில் கொண்டு, நெல்-கோதுமை சாகுபடியில் இருந்து விவசாயிகளை மாற்ற நினைக்கும் ஒன்றிய அரசு, அதற்கான மாற்றுப் பயிர்களுக்குக்கொள்முதல் உத்தரவாதத்தை பட்ஜெட்டில் அளிக்காதது ஒரு பெரும் முரணாகும்.
சந்தைத் தலையீட்டுத் திட்டங்கள் (Market Intervention Schemes), விலைக் கட்டுப் பாட்டு முறைகளை வலுப்படுத்துவதன் மூலமே விவசாயிகளின் வருமானத்தை உடனடியாக உயர்த்த முடியும். பரவலாக்கப்பட்ட கொ ள் முதல் நிலையங்களை அனைத்து மாவட்டங்களிலும் நிறுவுவது விவசாயிகளுக்குச் சிறந்த சந்தை வாய்ப்பை உருவாக்கும். அத்தகைய கட்ட மைப்பு வசதிகள் இல்லாமல், விவசாயிகளை மாற்றுப்பயிர்களுக்கு மாறச் சொல்வது பலன் தராது. கட ந்த பல ஆண்டுகளாகச் சாகுபடிச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும்,வருமானம் குறைவாக உள்ளதாகவும் ஒன்றிய அரசின் விவசாயச் செலவுகள் – விலைகளுக்கான ஆணையத்தின் (CACP) தரவுகள் காட்டுகின்றன.
ஆனால், சாகுபடிச் செலவுக்கும் விவசாயி களுக்குச் சந்தையில் கிடைக்கும் விலைக்கும் இடையே உள்ள பெரும் இடைவெளியை பட்ஜெட் அங்கீகரிக்கத் தவறியுள்ளது. ஏஅய் போன்ற தொ ழில் நுட்ப மாற்றங்கள் ஒரு விவசாயியின் கையில்
பணமாக மாறுவதற்குப் பல ஆண்டுகள் எடுக்கும். ஆனால், கடன் சுமையையும் வாழ்க்கைப் பாடுகளையும் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒரு விவசாயியால் அந்த எதிர்காலப்பலன்களுக்காக நீண்ட காலம் காத்திருக்க முடியாது. சுருக்கமாகச் சொன்னால், பட்ஜெட் 2026 இந்தியவேளாண்மையைப்புதியகாலத்துக்கு ஏற்ப மாற்ற முற்படுகிறது. இருப்பினும், ஒரு பட்ஜெட் விவசாயிகளுக்கு முழுமையான மனநிறைவைத்தர வேண்டுமானால், அது எதிர்காலத் திட்டங் களுக்கும் விவசாயிகளின் இன்றைய வாழ்வாதாரப் பிரச்சினைக்கும்இடையே ஒருசரியானபாலத்தைக் கட்டமைக்க வேண்டும். இல்லையெனில், உரிய பலன்கள் கிடைக்காது!
நன்றி: ‘இந்து தமிழ்திசை’ பக்.12 11.2.2026
ஒன்றிய நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு வருமான உயர்வுக்கு வழி இல்லை வேளாண் துறை நிபுணர் நாராயண மூர்த்தி கருத்து
Leave a Comment
