தஞ்சையில் பிப்.21 இல் நடைபெறவுள்ள மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் மாநில மாநாட்டிற்கு அலைகடலாகத் திரள்வோம்! திருச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, பிப். 11- தஞ்சையில் பிப்.21 இல் நடைபெறவுள்ள  மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம்  மாநில மாநாட்டிற்கு பெருந்திரளாக பங்கேற்பது  என்று திருச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திராவிடர் கழகம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெறவுள்ள லால்குடி, பெரம்பலூர், அரியலூர், துறையூர், மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை மற்றும் இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில், நேற்று (பிப்.9)  காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் பாசறை துணைச் செயலாளர் க.அம்பிகா வரவேற்புரையாற்றினார். மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக பொன்முடி தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன், மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் சே.வசந்தி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் ரூபியா ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விக்னேகுமார், பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு,துணைத் தலைவர் இரா.சின்னசாமி, அரியலூர் மாவட்டம் வீரா.திராவிட முத்து,   தில்லைநகர் பகுதி தலைவர்  பா.சுல்தான் பாஷா, ஜெயில்பேட்டை அமுதா குணசேரகன், பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சங்கிலிமுத்து, பெரம்பலூர், வேப்பூர் ஒன்றியம் சின்னதுரை, திருவரங்கம் திருநாவுக்கரசு, வாழவந்தான்கோட்டை விசயராகவன், அல்லித்துறை தவமணி, தில்லைநகர் பேபி, சோமரசன்பேட்டை ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தீர்மானம்:

தஞ்சையில் பிப்.21இல் நடைபெறவுள்ள மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு பெருந்திரளாக பங்கேற்பது என்றும் மாநில மாநாட்டை விளக்கி உடனடியாக போர்க்கால அடிப்படையில் சுவரெழுத்து, விளம்பரப் பதாகைகள், உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

இரங்கல் – தீர்மானம்:  திருச்சி ஜெயில்பேட்டை பகுதி செயலாளர் குணாவின் சகோதரர் வீரபாண்டியன், மகளிரணித் தோழர் ரேவதியின் தாயார் சரோஜா, மாநில வழக்குரைஞர் அணிச் செயலாளர் சித்தார்த்தன், பெரியார் பேரூரையாளர் பேரா.சக்குபாய் நெடுஞ்செழியன் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *